புத்ரா ஜெயாவில் ஹாட்ரோக் கபே ஒன்றை நிறுவும் திட்டத்தை பெர்காசா இளைஞர் பகுதி எதிர்க்கிறது.
அதன் தலைவர் இர்வான் பாஹ்மி இட்ரிஸ், நேற்று விடுத்த அறிக்கையொன்றில் முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட் மதினா நகரை அடிப்படையாக வைத்து புத்ரா ஜெயாவை உருவாக்கியுள்ளார் எனக் குறிப்பிட்டார்.
“எனவே, இஸ்லாத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு நகரை மதுபானங்களை வெளிப்படையாக விற்பனை செய்து ‘காட்டுத்தனமான’ கேளிக்கைகளுக்கு இடமளிக்கும் ஒர் உணவகத்தை அமைத்துக் களங்கப்படுத்துவது தப்பு”, என்றாரவர்.
புத்ராஜெயா எப்போது இஸ்லாமிய நகர் ஆனது?
‘புனிதமான’ நகரில் மதம் வெறுக்கும் இலஞ்ச ஊழல்கள் கரை புரண்டு ஓடுவது குறித்து உங்கள் கருத்து..?!
இவன் யாரு மலேசியர்களுக்கு என்ன வேண்டும் என்று நிர்ணயிப்பதற்கு? புத்ரஜெயா புனித நகர் என்றால் ஊழலின் ஊற்றுக்கண் அங்கே இருப்பதன் நியாயம் என்ன? இது நியாயம் என்றால், புத்ரஜெயா ஒரு சாக்கடை என்பதும் நியாயம்தானே?
இது என்ன புது கதை??