பிகேஆர்: சகிப்புத்தன்மை இன்மையால் மலேசிய வருகை ஆண்டு பாதிக்கப்படும்

1 visiitசமயச்  சகிப்புத்தன்மை  குறைந்திருப்பதும்  ஒரு சமயத்துக்கு  எதிராக  இன்னொரு சமயத்தவர்  ஆர்ப்பாட்டங்களில்  ஈடுபடுவதும்  சுற்றுப்பயணிகளுக்கு  அச்சத்தைக்  கொடுத்து   ‘2014 மலேசிய  வருகை  ஆண்டு’  திட்டங்களைக்  கெடுத்து  விடலாம்  என சரவாக்  பிகேஆர்  தலைவர் பாரு  பியான் எச்சரித்துள்ளார்.

“மலேசியா  சமய  உரிமைகளைச் சகித்துக்கொள்ளாத  நாடுகளில்  ஒன்று  எனப்  பெயர் பெற்று  வருகிறது.  இது உலக அளவில்  பரவினால்  சகிப்புத்தன்மை இன்மையும்  ஆர்ப்பாட்டங்களும்  நிச்சயமாக  ‘2014 வருகை ஆண்டு’த் திட்டங்களைப்  பாதிக்கும்”, என்றாரவர்.

ஞாயிற்றுக்கிழமை,  சில  அம்னோ கிளைகள்  தேவாலயங்களில்   ‘அல்லாஹ்’  சொல்  பயன்படுத்தப்படுவதை  எதிர்த்து  ஆர்ப்பாட்டம்  செய்தது பற்றிக்  கருத்துரைத்தபோது  அவர்  இவ்வாறு  கூறினார்.