சிஎம்: சுல்தான் எனச் சுயமாக அறிவித்துக் கொண்டிருப்பவருக்கு அவ்வாறு கூறிக்கொள்ள உரிமை இல்லை

1 malaccaராஜா  நூர்  ஜான் ஷா  ராஜா துவாவுக்கு தம்மை மலாக்கா  சுல்தானாக  பிரகடனப்படுத்திக்  கொள்ளும்  உரிமை கிடையாது.  மலாக்காவின் ஆட்சி  அதிகாரம்  எப்படி  இருக்க  வேண்டும் என்பதைக்  கூட்டரசு அரசமைப்பும்  மலேசிய  சட்டங்களும்  வரையுறுத்துள்ளன என முதலமைச்சர்  இட்ரிஸ் ஹருன்  கூறினார்.

1 idris“கூட்டரசு  அரசமைப்பு  மலாக்கா யாங் டி-பெர்துவா  நெகிரி அதாவது   கூட்டரசு அரசாங்கத்தின்  பிரதிநிதி  ஒருவரை  மாநில  ஆட்சியாளராகக்  கொண்ட  ஒரு  மாநிலம் என்றும்  அவர்  பேரரசரால்  நியமிக்கப்படுகிறார்  என்றும்  கூறுகிறது.

“இந்த  உண்மையை  அவர் (ராஜா  நூர்  ஜான் ஷா)  உணர வேண்டும்”, என்றாரவர். 

ராஜா நூர்  ஜான்  ஷா,  தம்மை  மலாக்கா   சுல்தானின் பரம்பரையில் வந்தவர்  எனக்  கூறிக் கொண்டிருப்பது  பற்றி  முதலமைச்சர் (வலம்)  இவ்வாறு  கருத்துரைத்தார். 

-பெர்னாமா