ஜயிஸின் அதிரடிச் சோதனைக்கு வருத்தம் தெரிவித்த என்யுசிசி அதைத் தப்பென்று சொல்லவில்லை

1 nuccதேசிய ஒற்றுமை ஆலோசனை மன்றம் (என்யுசிசி), இன்று அதன் தொடக்கக் கூட்டத்தில், மலேசிய பைபிள் கழகத்தில் மேற்கொள்ளப்பட்ட அதிரடிச் சோதனையின்போது பகாசா மலேசியா, இபான் மொழி பைபிள்கள் கைப்பற்றப்பட்ட சம்பவத்துக்கு வருத்தம் தெரிவித்துக் கொண்டது.

ஆனால், புத்ரா ஜெயா  ஆதரவில்  செயல்படும் அம்மன்றம், அந்நடவடிக்கை தப்பு எனச்  சொல்லத் தயாராக இல்லை.

“என்யுசிசி  ஒரு  தந்தையைப்  போல்  தம் பிள்ளைகளில்  எவரையும்  குறை  சொல்ல  முடியாது.

“அதிரடிச் சோதனை நடத்தப்பட்டதற்காகவும்  பைபிள்கள் பறிமுதல் செய்யப்பட்டதற்காகவும்  என்யுசிசி  வருத்தம்  தெரிவிக்கிறது. அந்நடவடிக்கைவழி 2011 ஏப்ரலில் கூட்டரசு  அரசாங்கத்தால் உருவாக்கப்பட்டு  2013-இல் பிரதமரால் வலியுறுத்தப்பட்ட   10-அம்ச தீர்வு  அப்பட்டமாக  மீறப்பட்டிருக்கிறது”, என என்யுசிசி  தலைவர்  சம்சுடின் ஒஸ்மான் கூறினார்.

TAGS: