கிறிஸ்துவர்களை எதிர்க்கும் அம்னோவை கெராக்கான் ஆதரிப்பதாகக் கூறுவதன்வழி டிஏபி தலைமைச் செயலாளர் லிம் குவான் எங் ஏற்கனவே பதற்றமடைந்துள்ள நிலைமையை மேலும் மோசமாக்கப் பார்க்கிறார் எனக் கெராக்கானும் மசீசவும் சாடியுள்ளன.
“கெராக்கானுக்கு எதிரான கண்மூடித்தனமான ஒரு குற்றச்சாட்டைச் சுமத்தியதன்வழி லிம், சமயங்களுக்கிடையில் அதிகரித்துவரும் பதற்றத்தைக் குறைக்க ஒரு அரச தந்திரிபோலவோ ஒரு மாநிலத் தலைவர் போலவோ நடந்துகொள்ளவில்லை என்பது தெளிவு”, என கெராக்கான் துணைத் தலைமைச் செயலாளர் தோர் தோங் கீ (வலம்) கூறினார்.
இதே விவகாரம் தொடர்பில் மசீச உதவித் தலைவர் சுவா டீ யோங்கும் லிம்முக்குக் கண்டனம் தெரிவித்தார்.