வரலாற்றுச் சிறப்புமிக்க கம்போங் செட்டிக்குப் பக்கத்தில் கொண்டோமினியமும் தங்கும் விடுதியும் கட்டப்படுவதால் பாரம்பரியச் சிறப்புமிக்க அந்தக் கிராமம் பாதிக்கப்படாது என உத்தரவாதம் அளிக்கப்பட்டிருந்தாலும் கிராமத்தின் ஊடே ஒரு சாலை கட்டப்படும் எனத் தெரிவதால் அச்சாலையால் குறைந்தது 13 வீடுகளாவது இடிக்கப்படலாம்.
கம்போங் செட்டி நடவடிக்கைக் குழுப் பேச்சாளர் டி. சிதம்பரம் பிள்ளை (இடம்), 30.3 மீட்டர் அகலத்துக்கு ஜாலான் பெலாண்டோக் பூத்தே என்னும் சாலை அமைப்பதற்கு மாநில நகர்புற திட்டமிடல் பிரிவு அங்கீகாரம் வழங்கியுள்ளது என்றும் அதைக் காண்பிக்கும் ஆவணம் ஒன்று தமக்குக் கிடைத்துள்ளது என்றும் தெரிவித்தார்.
“கிராமத்தின் ஊடே 30மீ. சாலை கட்டப்பட்டால் என்னவாகும். கிராமத்தை இரண்டாக பிரித்துவிடும்”, எனச் சிதம்பரம் கூறினார்.
அதனால் கிராமத்தின் அமைதி பாதிக்கப்படுவதுடன் அதன் இயல்பு வாழ்க்கையும் பாதிப்புறும் என்றாரவர்.
இப்பவே இப்படீன்னா ……இன்னும் 10 -15 வருஷத்திலே நமது தம்பி தங்களின் நிலைமை என்னவாகும் இந்த நாட்டிலே? நினைச்சா பயமா இருக்கு! மேம்பாடு என்ற பெயரிலே..நம்முடையா அடையாளங்களை அடியோடு அகற்றுவதிலேயே குறியாக இருக்கிறார்களே இவர்கள்…! இத்தனை வெறியர்களா இவர்கள்?!