தூங்குமூஞ்சி கவுன்சிலர் சிஎம்மிடம் குட்டுப் பட்டார்

1 cmநேற்று பினாங்கு முனிசிபல் மன்ற(எம்பிபிபி) கவுன்சிலர்கள் பதவி-உறுதிமொழி  எடுத்துக்கொள்ளும்  சடங்கின்போது ஒரு  கவுன்சிலர் தூங்கி  விழுவதை முதலமைச்சர் லிம்  குவான் எங்  கவனித்து  விட்டார்.

பின்னர், லிம் தம்முரையில்  அதை  சுட்டிக்காட்டினார். கவுன்சிலரின் பெயரைக்  குறிப்பிடாமலேயே, “அது முறைகேடானது. (கவுன்சிலர்) இப்படியா பதவியைத்  தொடங்குவது”, என்றவர் கடிந்து கொண்டார்.

“கவுன்சிலர்களின்  அலவன்ஸ்  ரிம3,000 ரிங்கிட்வரை  உயர்த்தப்பட்டுள்ளது. எனவே, எம்பிபிபி  மக்களின் எதிர்பார்ப்புக்கு  ஏற்ப செயல்படாதிருக்க  இனி எந்தக் காரணமும்  சொல்ல முடியாது”, என்றாரவர்.

கவுன்சிலர்களைத் தொடர்புகொள்ள  சிரமமாக  உள்ளது என  மக்கள் புகார் செய்தால் அவர்களைப் பணிநீக்கம் செய்ய மாநில அரசு தயங்காது  என்றும்  லிம்  எச்சரித்தார்.