பெட்டாலிங் ஜெயா மாநகராட்சி மன்ற (எம்பிபிஜே), அதிகாரிகள் இன்று மலேசிய பைபிள் கழக(பிஎஸ்எம்) த்துக்குள் சென்று சோதனை செய்ய விரும்பினார்கள். ஆனால், அவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. கடந்த வாரம் சிலாங்கூர் இஸ்லாமிய விவகாரத் துறை (ஜயிஎஸ்) பிஎஸ்எம்மில் அதிரடிச் சோதனை நடத்தியது நினைவிருக்கலாம்.
இதன் தொடர்பில் பிஎஸ்எம் தலைமைச் செயலாளர் ரெவரெண்ட் சைமன் வொங்-கைத் தொடர்புகொண்டு பேசியபோது இன்று காலை எம்பிபிஜே அதிகாரிகள் இருவர் டமன்சாராவில் உள்ள அதன் கட்டிடத்தைப் பார்வையிட வந்தார்கள் என்றும் ஆனால், அவர்கள் உள்ளே நுழைய அனுமதிக்கவில்லை என்றும் கூறினார்.
“திடீரென்று வந்திருக்கக் கூடாது. வருவதாக இருந்தால் முதலில் எங்களுக்குத் தெரிவித்திருக்க வேண்டும்”, என்றாரவர். அக்கட்டிடம் 1986-இலிருந்து அதே இடத்தில்தான் இருக்கிறது என்றும் அவர் சொன்னார்.
இதனிடையே, எம்பிபிஜே மேயர், கட்டிடத்தைச் சோதனையிடத்தான் அதிகாரிகள் சென்றதாக தெரிவித்தார். அது வழக்கமான சோதனைதான் என்றாரவர்.
பிஎஸ்எம், எம்பிபிஜே இரண்டுமே முறையாக நடந்து கொண்டிருக்க வேண்டும் என்பதையும் அவர் வலியுறுத்தினார்.
திடீர் சோதனை தேவை இல்லாதது. அதற்கு நீங்கள் கேளிக்கை மையங்களைத் தேடிப் போக வேண்டும். அங்குப் போனால் உங்களுக்குத் தேவையானவைக் கிடைக்கும்!