மலேசிய பைபிள் கழகம் (பிஎஸ்எம்), முஸ்லிம்களிடம் மதப் பிரச்சாரம் செய்கிறது என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்பதால் அதனிடமிருந்து கைப்பற்றப்பட்ட பைபிள்களை மாநில அரசு திருப்பிக் கொடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டிருக்கிறது.
1985-இலிருந்து பைபிள்களை விநியோக்கும் ஒரு மையமாகத்தான் பிஎஸ்எம் செயல்பட்டு வருகிறது என அதன் தலைவர் லீ மின் சூன் தெரிவித்தார்.
“பைபிள்களை வாங்கி தேவாலயங்களுக்கு விநியோகம் செய்கிறோம். எல்லா மொழி பைபிள்களும் பைபிள் கழகத்தில் உள்ளன. நாங்கள் மதப் பிரச்சாரம் செய்வது இல்லை. கிறிஸ்துவர்களுக்கும் தேவாலயங்களுக்கும் பைபிள்கள் விநியோகம் செய்வது மட்டும்தான் எங்கள் வேலை”, என்றாரவர்.
சமய சுதந்திரத்தின் பொருட்டு கைப்பற்றப்பட்ட பைபிள்கள் திருப்பிக் கொடுக்கப்பட வேண்டும். அத்துடன் முஸ்லிம்-அல்லாதார்மீது நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் ஜயிஸுக்கு உண்டா என்பதும் விளக்கப்பட வேண்டும் எனவும் லீ கேட்டுக்கொண்டார்.
கிறிஸ்துவர்களின் புனித நூலானா பைபிலை முஸ்லிம்கள் தொடுவதே தீட்டு. அது ஜயிசாக இருந்தாலும் சாத்தானாக இருந்தாலும் எல்லாம் ஒன்று தான்!
ஒன்று மட்டும் ஞாபகத்தில் வைத்துக்கொள்ளுங்கள் ..! கிறிஸ்துவர்களுக்கு வருகிற துன்பம் இயேசுவுக்கு வருகிற துன்பம் !
கிறிஸ்துவர்களை துன்ப படுத்துகிறவர்கள் இயேசுவை துன்ப படுத்துகிறார்கள் ! கிறிஸ்துவோடு மோதுகிறவர்கள்,தேவ பிள்ளைகளோடு மோதுகிறவர்கள் அந்த கண்மளையோடு (இயேசு )
மோதுகிறார்கள் .! அந்த பாறையிலே மோதுகிறவர்கள் நொறுங்கி
போவார்கள்..அந்த பாறையில் மோதுகிற கட்சிகள் நொறுங்கி போகும் .
நிலா.. கொஞ்ஜம் கூல் லா.. இது பிரசங்கம் செய்யும் நேரம் அல்ல.. போராடும் நேரம்.. கிருஸ்தவர்களோடு மட்டும் அல்ல, யாருக்கு யார் துன்பம் கொடுத்தாலும் இயற்கை தக்க பலனை தந்தே தீரும்.. எல்லா சமயத்தவருக்கும் அவரவருக்கான எல்லைகள் இருக்கின்றன என்பதை அரசு புரிந்து கொள்ள வேண்டும்.