கிறிஸ்துவர்களுக்கு மலாய்மொழி பைபிளா? நம்பலாமா?

1 al kitab‘மலாய்க்காரர்களிடையே கிறிஸ்துவ சமயத்தைப் பரப்பும்  முயற்சி இல்லை  என்பதை  உறுதிப்படுத்திக்கொள்ளும் பொறுப்பு’ சிலாங்கூர் இஸ்லாமிய விவகாரத் துறை(ஜயிஸ்)க்கு உண்டு.

அப்படிப்பட்ட  முயற்சிகள் இல்லை என்பது  இப்போது  தெளிவாகியுள்ளது என  ஷியாரியா வழக்குரைஞர்  சங்கத் தலைவர் மூசா  ஆவாங், மலேசியாகினிக்கு  அனுப்பிவைத்த அறிக்கையில்  குறிப்பிட்டார்..

ஆனால், ஒரு விசயம்தான் நெருடலாக உள்ளது  என்றாரவர்.

“மலாய்மொழி  பைபிள்  கிறிஸ்துவர்களுக்கானது என்பது உண்மைதானா?  அது  கிறிஸ்துவர்களுக்கானது  என்றால், எதற்காக  மலாய்மொழியில்  அச்சடிக்கப்பட்டிருக்கிறது? மலாய்க்காரர்களில்  கிறிஸ்துவர்கள்  இருக்கிறார்களா?”, என்றவர்  வினவினார்.