புத்ரா ஜெயாவில் ஹார்ட் ரோக் கபேயைத் திறப்பதால் கேடு எதுவும் நேர்ந்துவிடாது என்கிறார் முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட்.
நாட்டின் நிர்வாக தலைநகரமானது அது கேளிக்கைகளுக்கு எதிரானது அல்ல. ஆனால், மதுபானங்கள், கீழ்த்தரமான உணர்வுகளைத் தூண்டும் நிகழ்ச்சிகள் போன்றவற்றுக்கு அங்கு இடமில்லை என்பதை அவர் வலியுறுத்தினார்.
“நமக்குப் பொழுதுபோக்கு நிகழ்வுகள் தேவை. திருமணங்களின்போதுகூட கேளிக்கை நிகழ்வுகள் நடப்பதற்குத் தடை விதிப்பதில்லை. அப்படி இருக்க, கேளிக்கை மையங்களுக்கும் உணவகங்களுக்கும் எதற்குத் தடை விதிக்க வேண்டும்?”, என்றவர் வினவினார்.
மலாய்க்காரர்கள் முழுமையாக மதத்தில் ஏறி குழம்பி போய் உள்ளார்கள் என்பதற்கு இதுவே சரியான சான்று.
உங்கள் செல்லப்பிள்ளை perkasa முடியாது என்கிறது…! அப்பன் பேச்சைக் கேட்காத தறுதலை பிள்ளை.
ஹாட் ரோக் நிறுவனத்துக்கும் உங்களுக்கும் தொடர்பு உண்டோ..?
மகனின் பீர் நிறுவனம் sam muegel அங்கு விற்று பணம் பண்ணலாமே !