ரபிஸி: ஜிஎஸ்டி விளக்கமளிப்புக்கு நிறைய செலவிடுவது அதன் நோக்கத்தைத் தோற்கடிக்கும் செயலாகும்

1 gstபொருள், சேவை வரி(ஜிஎஸ்டி) பற்றி விளக்கமளிக்க  ஒரு இயக்கத்தைத் தொடங்கி  அதற்காக பெரும்பணத்தைச்  செலவிடுவது எந்த நோக்கத்துக்காக  அந்த  வரி அடுத்த  ஆண்டில் அமல்படுத்தப்படவிருக்கிறதோ  அந்த நோக்கத்தையே தோற்கடித்து விடும் என்று பிகேஆர்  வியூக இயக்குனர்  ரபிஸி ரம்லி  கூறினார்.

“பற்றாக்குறை நிலையைச் சரிக்கட்டவும்  செலவுகளைக் குறைக்கவும்  ஜிஎஸ்டி கொண்டுவரப்படுவதாக காரணம்  சொல்லப்படும்போது  ஜிஎஸ்டி அமலாக்கத்துக்கு  ஆகும் செலவுகளையும் அணுக்கமாகக் கவனிக்க  வேண்டும்”, என்றவர் சொன்னார்.

ஜிஎஸ்டி பற்றி  விளக்கமளிப்புக்கும்  ஜிஎஸ்டி  மென்பொருள்  தயாரிப்புக்கும்  ரிம200 மில்லியன் செலவிடப்படும்  என அரசாங்கம் கூறி இருப்பது  பற்றி  ரபிஸி  கருத்துரைத்தார்.