நிலச் சரிவு நிகழ்ந்த ஜாலான் மகாமேருவில் இரண்டு தடங்கள் திறக்கப்பட்டன

1 landநேற்று மாலை  புக்கிட்  துங்குவில்  நிகழ்ந்த நிலச் சரிவால் மூடப்பட்ட  மகாமேரு  சாலை  இன்று காலை மீண்டும் போக்குவரத்துக்குத் திறந்து விடப்பட்டது.

நாடாளுமன்றத்திலிருந்து  புத்ரா வணிக மையம் நோக்கிச் செல்லும்  அச்சாலையின்   மூன்று தடங்களில் இரண்டு திறக்கப்பட்டதை அடுத்து  அங்கு போக்குவரத்து  சுமூகமாக  நடைபெற்று  வருவதாக  போக்குவரத்து  போலீஸ்  பேச்சாளர்  ஒருவர் தெரிவித்தார்.

நேற்று மாலை  மணி 5.20க்கு  ஏற்பட்ட  நிலச்சரிவால் 10-கிலோ மீட்டர் நீளத்துக்குப்  போக்குவரத்து தடைப்பட்டிருந்தது.