நியூ ஸ்ரேய்ட்ஸ் டைம்ஸ் சென். பெர்ஹாட்டின் முன்னாள் ஆசிரியர் அப்துல் காடிர் ஜாசின், தாம் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் பொருளாதாரத்தை நிர்வகித்து வரும் முறையைக் குறைகூறியது சரியான ஒன்றே என்கிறார். நாடு நல்லதொரு பொருளாதாரத்தைப் பெற்றிருக்க விமர்சனங்கள் அவசியம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
பொருளாதாரம் நல்ல முறையில் நிர்வகிக்கப்படவில்லை என்பதே அவரது கருத்தாகும்.
முன்பு, முன்னாள் பிரதமர் அப்துல்லா அஹ்மட் படாவி உதவித் தொகைகளைக் குறைத்தபோது அவரைத் தாம் குறைகூறியிருப்பதாக அப்துல் காடிர் அவரது வலைப்பதிவில் கூறினார்.
இருவருமே ஊதாரித்தனமாக செலவு செய்வதில் ஆர்வம் காட்டினார்கள் ஆனால், பொருளாதாரத்தை நிர்வகிப்பதில் சோடை போனார்கள் என்றவர் குற்றம் சாட்டினார்.
மேலும் அவர், நஜிப் என்ன தவறே இழைக்காத புனிதரா என்றும் வினவினார்.
“நஜிப்பும் அவரது அரசாங்கமும் ஒன்றை மறந்துவிடக் கூடாது. மக்கள்தாம் அவர்களைத் தேர்ந்தெடுத்தனர். மக்கள் ஒன்றும் விலைகளைக் குறைப்போமே தவிர உயர்த்த மாட்டோம் என்றெல்லாம் வாக்குறுதி அளிக்கவில்லை.
“அந்த வாக்குறுதியை வழங்கியவர் நஜிப். அப்படி என்றால் அந்த வாக்குறுதியை இப்போது மீறுகிறவர் யார்?”, என அப்துல் காடிர் வினவினார்.
தமது பின்னூட்டங்களையும் விமர்சனங்களையும் அரசாங்கத்தின்மீதான கண்டனங்களாகக் கருதக்கூடாது எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.
நல்ல பயனுள்ள கருத்தை கூறியதற்கு மிக்க நன்றி ,,.
இத்துணை தைரியம் இவருக்கு எங்கிருந்து வந்தது? எப்படி வந்தது? என்னால் நம்பவே முடியவில்லை.
உங்களை போன்றவர்கள் தான் அரசு ஆட்சி பீடத்தில் அமர்ந்திருப்பவர்களுக்கு புத்திமதி சொல்லி திருத்த பார்க்கணும். நல்லதை சொல்லியதற்கு வாழ்த்துக்கள்..!
புத்திசாலிகளை BN அரசாங்கம் விரும்புவதில்லை ! யாராவது ஒருவர் துணிந்து குரல் கொடுத்தல் – “நீ என்ன ஹீரோவா ” என்று ஏளனம் செய்கிறார்கள் நமது அரை வேக்காடு அமைச்சர்கள் ! ஒரு பத்திரிக்கை ஆசிரியர் என்பதைவிட இந்த நாட்டின் குடிமகன் என்ற உணர்வோடு கருதுகூரும் உங்களை பாராட்டுகிறோம் !!
நஜிப்புக்கு எப்போதுமே விமர்சனம் பிடிக்காது,விமர்சனம் என்ற பேரில் ஆட்சியை கவில்த்துவிடுவீர்கள்!