ஐஎஸ்ஏ கொடுமையின் நினைவுச் சின்னத்தை இழுத்து மூடுவீர்

1 gmiபேராக்கில் உள்ள கமுந்திங் தடுப்புமுகாம் எதிரணித் தலைவர்களையும் சமூக  ஆர்வலர்களையும்   அடைத்துவைக்க நெடுங்காலமாக பயன்பட்டு  வந்துள்ளது. 

கடைசியாக அங்கு உள்நாட்டுப் பாதுகாப்புச்  சட்டத்தின்கீழ் தடுப்புக்  கைதிகளாக  இருந்த சிலரும் கடந்த வாரம் விடுவிக்கப்பட்டனர். ஆனாலும், அரசாங்கம் அம்முகாமை மூடுவதற்குத்  தயாராக இல்லை.

அதனால் சீற்றமடைந்த ஐஎஸ்ஏ- எதிர்ப்பு  இயக்கம்(ஜிஎம்ஐ), முகாமை  ஒரேயடியாக இழுத்து  மூட வேண்டும்  என்று  வலியுறுத்தியுள்ளது.

“அரசாங்கம்  அரசியல் உருமாற்றத்தை  ஏற்படுத்துவதில்  உண்மையில்  அக்கறை  கொண்டிருந்தால்  ஐஎஸ்ஏ-இன் கொடுமைகளை நினைவுபடுத்தும்  சின்னமான  கமுந்திங்  முகாமை  இழுத்து மூட வேண்டும்”, என ஜிஎம்ஐ தலைவர்  சைட்  இப்ராகிம்  சைட் நோ கேட்டுக்கொண்டார்.    பேராக்கில் உள்ள கமுந்திங் தடுப்புமுகாம் எதிரணித் தலைவர்களையும் சமூக  ஆர்வலர்களையும்   அடைத்துவைக்க நெடுங்காலமாக பயன்பட்டு  வந்துள்ளது. 

கடைசியாக அங்கு உள்நாட்டுப் பாதுகாப்புச்  சட்டத்தின்கீழ் தடுப்புக்  கைதிகளாக  இருந்த சிலரும் கடந்த வாரம் விடுவிக்கப்பட்டனர். ஆனாலும், அரசாங்கம் அம்முகாமை மூடுவதற்குத்  தயாராக இல்லை.

அதனால் சீற்றமடைந்த ஐஎஸ்ஏ- எதிர்ப்பு  இயக்கம்(ஜிஎம்ஐ), முகாமை  ஒரேயடியாக இழுத்து  மூட வேண்டும்  என்று  வலியுறுத்தியுள்ளது.

“அரசாங்கம்  அரசியல் உருமாற்றத்தை  ஏற்படுத்துவதில்  உண்மையில்  அக்கறை  கொண்டிருந்தால்  ஐஎஸ்ஏ-இன் கொடுமைகளை நினைவுபடுத்தும்  சின்னமான  கமுந்திங்  முகாமை  இழுத்து மூட வேண்டும்”, என ஜிஎம்ஐ தலைவர்  சைட்  இப்ராகிம்  சைட் நோ கேட்டுக்கொண்டார்.