பினாங்கில் சீன ஆலய விவகாரங்களைக் கவனித்துக்கொள்ள ஒரு தனி வாரியம் அமையும்.
அது, இந்து ஆலயங்களைக் கவனித்துக்கொள்ளும் பினாங்கு இந்து அற வாரியம் போல் அமைந்திருக்கும் என முதலமைச்சர் லிம் குவான் எங் கூறினார்.
இந்து அற வாரியம் துணை முதலமைச்சர் 11 பி.இராமசாமியின் தலைமையில் செயல்படுகிறது. அதில் மற்றவர்களோடு மாநில சட்டமன்ற உறுப்பினர்களான ஆர்.எஸ்.என். ராயர் (ஸ்ரீ டெலிமா), ஏ.தனசேகரன்(பாகான் டாலாம்), டி.ஜெயபாலன் (பத்து இபான்) ஆகியோரும் உறுப்பு வகிக்கிறார்கள்.
இங்கே நான் கேள்விபட்ட ஒரு உண்மையை சொலுகிறேன்,பினாங்கு தண்ணீர் மலைக்கு சொந்தமான கோவிலை ஒட்டிய,நிலத்தில் பள்ளிவாசல் கட்ட காய் நகர்த்தும் திட்டம் முதலமைசர் லிம் எங் குவானுக்கு தெரிந்ததும்,இந்து அறவாரியத்துக்கு தகவல் சொன்னதும் இந்து அறவாரியம் மின்னல் வேகத்தில் அந்த நிலத்தில் கம்பீரமாக கோயிலை உருவாக்கியது !
அலை ஓசை, இந்த முன்னெச்சரிக்கை தான் நமது சமூகத்துக்குத் தேவை. இதே எங்கள் ம.இ.கா. காரனாக இருந்தால் முதலில் இடத்தைக் கொடுத்து விட்டு அப்புறம் நம்மிடம் வந்து முதலைக்கண்ணீர் வடிப்பான்! அதே சமயத்தில் ஒவ்வொரு மாநிலத்திலும் ஆலய விவகாரங்களுக்காக தனி வாரியங்கள் அமைக்கப்பட வேண்டும்.
அலை ஓசை கூறியது போல் இன்னும் எவ்வளவோ நடக்குது அரசாங்க அலுவலகத்திற்குள். நமக்கும் அங்கே ஒற்றர்கள் நிறையவே தேவைப்படுகின்றார்கள். ஒவ்வொரு வருடமும் எஸ்.பி.எம். தேர்வில் எவ்வளவு பூமிபுத்தெரா மாணவர்கள் தேர்வாக வேண்டும் என்ற இலக்கை நிர்ணயிப்பதற்கு, பரீட்சை தேர்வு புள்ளிகளை வைத்து ‘Passing Graph’ -ய் ஏற்றுவதர்க்கும் இறக்குவதற்கும் ‘Unit Dasar’ என்று தனியாக இயங்குகின்றதாம். இங்கே வேலை செய்பவர்கள் எல்லாம் மண்ணின் மைந்தர்களாம். அவர்கள்தாம் ‘Maths & Add Maths’ – க்கும் அவர்தம் இன சார்ந்த மாணவர்கள் 25 புள்ளிகள் பெற்றாலும் தேர்ச்சி பெரும் வகையில் வேலை செய்கின்றார்கள் என்று விவரம் அறிந்த ஊர் குருவி ஒன்று சொல்கின்றது.
நண்பர் அலையோசை சொன்ன நிலைதான் ஷாஆலாம், சுங்கை ரங்கம் தமிழ்பள்ளிக்கும் நேர்ந்தது. அங்கே கோவில் பிழைத்தது. இங்கே தமிழ்ப்ள்ளியின் உபரி நிலம் நம்மவர்களின் சுயநல அரசியலால் பறிக்கப்பட்டுப்போனது. இதில் உள்ள ஒரு வெட்கக்கேடு என்னவென்றால் சம்பந்தப்பட்ட துறை மலாய்கார அதிகாரியே, “உங்கள் தமிழ்ப்பள்ளி நிலத்தை எடுக்கும் வேலை முன்னெடுக்கப்படுகிறது. தயவுசெய்து உங்கள் தலைவரகளை விரைந்து இதற்கொரு முடிவினை எடுக்கச்சொல் “என்று எச்சரித்தும் செயல்படாமல் போனதுதான்.தேனி அவர்களே… நீங்கள் குறிப்பிட்டுள்ள நிலைதான் இந்த நாட்டைப் பொருத்தவரை யதார்த்தமான உண்மை. நாடு இப்படியெல்லாம் இனவெறியாட்டம் ஆடிக்கொண்டிருக்க நம்மவர்களோ ஆழ்ந்த தூக்கத்தில் …..!