டிஏபி: கோமாங்கோ-வைச் சட்டவிரோதமானது என அறிவித்தது கேலிக்குரியது

1 comangoஎன்ஜிஓ-களின் கூட்டமைப்பான  கோமாங்கோவைச் சட்டவிரோதமானது என்று  உள்துறை  அமைச்சு அறிவித்திருப்பதை  டிஏபி-இன் டோனி  புவா  கேலி  செய்துள்ளார்.

நடப்பு உள்துறை  அமைச்சரான  அஹமட் ஜாஹிட்  ஹமிடி,  பெர்சே 2.0-ஐ  சட்டவிரோத அமைப்பு  என்று  அறிவித்த  முன்னாள் அமைச்சர்  ஹிஷாமுடின்  உசேனை  “மிஞ்சப் பார்க்கிறார்  என புவா  கூறினார்.

“பெர்சே  2.0 போன்றே  கோமாங்கோவும் 54  என்ஜிஓ-களின்  ஒரு கூட்டமைப்பு. அது  தன்னை  ஒர்  அமைப்பாக  என்றும்  கருதியதில்லை. என்ஜிஓ-கள்  ஒன்றுகூடவும்  கருத்துகளைப் பரிமாறிக்கொள்ளவும்  அது  ஒரு பொதுத்  தளமாகப்  பயன்படுகிறது”, என புவா  அறிக்கை ஒன்றில்  கூறினார்.

கோமாங்கோ தன்னை  ஒரு சங்கமாக சங்கப்  பதிவகத்தில்  பதிவு  செய்துகொள்ளவில்லை  என்பதால்  அது  ஒரு  சட்டவிரோத  அமைப்பு  என உள்துறை அமைச்சு  நேற்று  அறிவித்திருந்தது.

ஹிஷாமுடினும், பெர்சே 2.0-க்குத்  தடை விதித்தபோது இப்படி  ஒரு வாதத்தைத்தான்  முன்வைத்தார். ஆனால், உயர் நீதிமன்றம் அதைத்  தள்ளுபடி  செய்தது.