‘ஹெரால்ட்’ ஆசிரியர் முஸ்லிம்களின் மனத்தைக் காயப்படுத்தப் புறப்பட்டிருக்கிறார்

mahathirகத்தோலிக்க  வார இதழ்  ஆசிரியர்  பாதர்  லாரன்ஸ்  அண்ட்ரு, சிலாங்கூர் தேவாலயங்களில் இறைவனைக் குறிக்க அல்லாஹ் என்னும் சொல்  தொடரந்து  பயன்படுத்தப்பட்டு  வரும்  என வலியுறுத்தி  வருவது  அவர் “முஸ்லிம்களின் மனத்தை நோகடிப்பதில்” முனைப்பாக  இருக்கிறார்  என்பதைக்  காண்பிக்கிறது.

முன்னாள் பிரதமர்  டாக்டர்  மகாதிர்  முகம்மட் இவ்வாறு  குறிப்பிட்டதாக  உத்துசான்  மலேசியா  அறிவித்துள்ளது. பாதிரியார், அல்லாஹ்  என்னும் சொல் முஸ்லிம்களுக்கே  உரியது  என்ற  கூட்டரசு  நிதிமன்றத்  தீர்ப்பை  மதிக்க  வேண்டும், நாட்டின் சமய இணக்கநிலைக்கு  உதவ  வேண்டும்  என  மகாதிர்  கேட்டுக்கொண்டார்.

“நாம்  மற்றவர்  மனத்தை நோகடிக்கக் கூடாது.  ஆனால்,  அவர்  வேண்டுமென்றே அதைச்   செய்கிறார்.  நீதிமன்றம்  கூடாது  என்று  சொல்லி  இருப்பதை  அவர்  மதிக்கவில்லை. இது  நீதிமன்றத்தை  அவமதிப்பதாகும்”, என்றும்  மகாதிர்  சொன்னார்.