சிலாங்கூர் இஸ்லாமிய சமய விவகார மன்றம் (மயிஸ்), அதன் அமலாக்கப் பிரிவான மாநில இஸ்லாமிய விவகாரத் துறை (ஜயிஸ்), அதிரடிச் சோதனை நடத்தி பைபிள் பிரதிகளைக் கைப்பற்றிய நடவடிக்கையைத் தற்காத்துப் பேசியுள்ளது.
ஜயிஸ் மற்றவர்களின் சமய உரிமைகளை மீறியதாகக் குறைகூறப்படுவது பற்றிக் கருத்துரைத்த மயிஸ் தலைவர் முகம்மட் அட்சிப் முகம்மட் இசா, அது தன் கடமையைத்தான் செய்தது என்றார்.
“முஸ்லிம்களிடையே மற்ற சமய கருத்துகள் பரப்பப்படுவதைத் தடுக்கும் சட்டத்தை அமல்படுத்தும் நோக்கத்தில்தான் ஜயிஸ் அந்நடவடிக்கையை மேற்கொண்டது”, என்றாரவர்.
மற்றபடி, மற்றவர்களின் சமய உரிமைகளில் தலையிடும் நோக்கம் அதற்குக் கிடையாது முகம்மட் அசிப் இன்று அறிக்கை ஒன்றில் கூறினார்.
அப்படித்தானே நீங்கள் எப்போதும் சொல்லுகிறீர்கள். மற்றவர்கள் மட்டும் என்ன உங்கள் சமய உரிமைகளில் தலையிடுகிறார்களா!