26 பொருள்களின் விலை உயரும்

1 forumஎல்லாத் துறைகளிலும்  விலையேற்றம்  நடப்புக்கு  வந்த  பின்னர் குறைந்தது  26 பொருள்கள்  மற்றும்  சேவைக் கட்டணங்கள்  விலை உயரும்  என்கிறார் யுனிவர்சிடி  உத்தாரா மலேசியா(யுயுஎம்)  பேராசிரியர்  ஒருவர்.

நேற்று  சினார்  ஹரியான்  ஏற்பாடு  செய்திருந்த  விலை உயர்வு  மீதான  கருத்தரங்கத்தில்  கலந்துகொண்டு  பேசிய  யுயுஎம்  பொருளாதாரப்  பேராசிரியர்  அமிர்  உசேன்  பஹாருடின், மாட்டிறைச்சி,  காய்கறிகள்  போன்ற  அத்தியாவசியப் பொருள்கள்  விலை  உயரும்  என்றார்.

ஆனால்,  எல்லா  26 பொருள்களையும்  அவர்  பட்டியலிடவில்லை.

1 amir“எல்ஆர்டி, டோல்  கட்டணங்களையும்  சேர்த்துக்  கொண்டிருக்கிறேன்.  எல்ஆர்டி  கட்டண உயர்வு  இன்னும்  அறிவிக்கப்படவில்லை என்றாலும்  எந்த  நேரத்திலும்  அறிவிக்கப்படலாம்  என்பதால்  அதையும்  சேர்த்துக் கொண்டேன்”,  என்றாரவர்.

அரசாங்கத்தின் இடர்ப்பாட்டைத்  தம்மால்  புரிந்துகொள்ள  முடிகிறது  என்று  கூறிய  அமிர்,  எரிபொருள்  விலை உயர்வால்  செலவுகள்  உயரும்போது  அதைச்  சமாளிக்கும் முயற்சியில்  அரசாங்கம் மக்களின்  நலனைக் கவனிக்க  முடிவதில்லை  என்றார்.

“பிரச்னை  என்னவென்றால்,  அந்நிலை  ஏற்படும்போது  அது  நிறுவனங்களின்  இலாப- நட்டத்தைத்தான்  பார்க்கிறதே  தவிர  மக்களை  எண்ணிப்  பார்ப்பதில்லை”,  என்றவர்  மேலும் கூறினார்.