மலேசிய பைபிள் கழகத்தில் மேற்கொள்ளப்பட்ட அதிரடிச் சோதனையை எண்ணி வருந்துவதாக மலேசிய அனைத்துசமய மன்றம் கூறியது.
ஜனவரி 2-இல், சிலாங்கூர் இஸ்லாமிய விவகாரத் துறை (ஜயிஸ்) அங்கு அதிரடிச் சோதனை மேற்கொண்டு மலாய்மொழி பைபிள்கள் பலவற்றைக் கைப்பற்றிய சம்பவம் “சட்ட விரோதமானது” என மலேசிய பெளத்தம், கிறிஸ்துவ, இந்து, சீக்கிய, தாவோயிச சமயங்களின் கூட்டு ஆலோசனை மன்றம் கூறியது.
எந்தவொரு சமய அமைப்புக்கும் மற்றொரு சமயத்தைக் கட்டுப்படுத்தும் உரிமை கிடையாது என்று கூறிய அமமன்றம், ஜயிஸ் அதிகாரத்தைமீறி நடந்துகொள்ளக் கூடாது என்று வலியுறுத்தியது.
காக்க மகாதிர் கக்கா பேசுகிறார் ….!
அனைத்துச் சமயக்குழுவில் இஸ்லாம் ஏற்றுக்கொள்ளப்பட வில்லையே! அப்படியிருக்க மற்ற சமய உரிமைகளில் தலையிட இவர்கள் யார்?