அடிக்கடி முட்டி மோதிக்கொள்வதையே வழக்கமாகக் கொண்ட டிஏபியும் மலாய்க்காரர் உரிமைகளுக்காக போராடும் என்ஜிஓ-வான பெர்காசாவும் பாவ வரிகளைப் பொறுத்தவரை ஒத்த சிந்தனையைக் கொண்டிருப்பதாக தெரிகிறது.
பாவ வரிகள் மூலம் கிடைக்கும் வருமானத்தை அரசாங்கம் தொகுநிதிக் கணக்கில் சேர்க்காமல் தனியாக வைக்க வேண்டும் என்று டிஏபி-இன் சிரம்பான் எம்பி அந்தோனி லொக் முன்வைத்த பரிந்துரையை பெர்காசா தலைவர் இப்ராகிம் அலி வரவேற்றார்.
“அதனுடன் உடன்படுகிறேன். இதைத்தான் நானும் நீண்டகாலமாக சொல்லி வந்திருக்கிறேன். இப்பரிந்துரைக்கு எல்லா முஸ்லிம்களும் ஆதரவு தெரிவிப்பர்”, என்றாரவர்.
அதில் பெரும் பங்கு மலாய்க்காரர்கள் வங்கிகளில் முடங்கி கிடக்கிறது!
இந்தியர்களிடமும்,சீனர்களிடமும் கொள்ளையடித்த பணம் அனைத்தும் halal!
கஜானா காலியாக அலி பாபா ஆலோசனை சொகிறார்!சூதாட்ட பணம் மானியமாக அலிக்கும் போவுது அராம் !
இவன ஒழிக்கணும்….
கோலாசிலங்கூர் ,சபாக் பெர்ணம், செகிஞ்சான் பகுதிகளில் வயலில் பிடிபடும் “உடும்புகளை ” கிள்ளான் பகுதியில் விற்றுவந்த மலாய் விவசாயியை பார்த்து கேட்டேன் , உடும்பு ஹராம் என்கிறார்கள் , அதில் கிடைக்கும் பணம் ஹராம் இல்லையா என்று கேட்டேன் ! அவர் சிரித்துக்கொண்டே பதில் சொன்னார் , குதிரை பந்தயம் , கேசினோ , மது கடைகள் , பன்றி விற்பனை இதில் வரும் வரிப்பணம் ஹராம்தான் – அரசாங்கமே இந்த ஹராம் பணத்தைதான் தாரளமாக செலவுசெதுகொண்டிருகிறது , குறிப்பாக மலாய் சமுதாயமே இந்த பணத்தை பெறும்போது , என் குடும்ப வறுமைக்கு ,வாயிற்று பிழைப்புக்கு எப்படியாவது சம்பாரிக்க வேண்டும் .பிழைப்பு நடத்தவேண்டும் . நான் இறைச்சியை சாப்பிட்டால்தான் ஹராம் என்றார் . பண விசயத்தில் ஹராமாவது ஆட்டுக்குட்டியாவது !!!!
நீயே ஒரு பாவப் பிறவி! உனக்கும் அப்படி ஒரு சிந்தனையா! இந்தப் பாவ வரியை எப்படி பயன் படுத்த வேண்டும் என்று நீங்களே சொல்லி விடுங்களேன்!
உன்னைப்போல பட்சோந்தியை நம்ப தயாராக இல்லை டிஏபி கட்சி..?
அம்னோ தான் உண்மையான முஸ்லிம் கட்சியாக இருந்தால் இதை செய்யட்டும் பார்ப்போம். செய்ய மாட்டான் . காரணம் அம்னோ உண்மையான முஸ்லிம்களை கொண்ட கட்சி அல்ல.