பிரதமர் கிளந்தானுக்குரிய எண்ணெய் உரிமப் பணத்தை மறந்து விட்டாரா?

kelantanஓராண்டுக்கு  முன்னர், கிளந்தானின்  எண்ணெய்  உரிமப்  பணம் பற்றி பாஸுடன்  கலந்துரையாட முன்வந்த  பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்  அதை  அடியோடு  மறந்து  விட்டாரா  என்று  வினவுகிறார்  முன்னாள்  ஆட்சிக்குழு  உறுப்பினர்  ஹுசாம்  மூசா.

கிளந்தானுக்கு  எண்ணெய்  உரிமப்  பணம்  வழங்குவதை  விவாதிக்க  அமைக்கப்படும்  புதிய  குழுவில்  சேர்ந்துகொள்ள  வருமாறு நஜிப்  கடந்த  ஆகஸ்டில்  பாஸுக்கு  அழைப்பு  விடுத்தார். 

அப்போது  கிளந்தான்  அம்னோ  தலைவராக  இருந்த  முஸ்தபா  முகம்மட்,  13-வது  பொதுத்  தேர்தலுக்கு  முன்னதாகவே  அவ்விவகாரத்துக்குத்  தீர்வு  கண்டு  விடலாம் என்றுகூட  பெருமையாகக்  கூறிக்  கொண்டார்  என ஹுசாம்  தெரிவித்தார்.
“ஆறே  மாதங்களில்  கொடுப்போம்  என்று  வாக்குறுதி அளித்தார்(நஜிப்). இப்போது  அதை  மறந்து விட்டார்  போலும்”, என்றாரவர்.

கிளந்தான் கலந்துரையாடலில்  கலந்துகொள்ள  தனது  பிரதிநிதியைக்கூட  நியமனம்  செய்துவிட்டுக்  காத்திருந்தது. ஆனால், புத்ரா  ஜெயாவிடமிருந்து  தகவலே  வரவில்லை.