என்எப்சி, இகோ சிட்டி கொண்டோமினியம் தொடர்பில் நுருல், சைபுடின் ஆகியோர்மீது வழக்கு தொடுத்தது

nfcதேசிய  ஃபீட்லோட்  கார்ப்பரேசன் சென். பெர்ஹாட்(என்எப்சி)-டும்  அதன்  தலைவர்  முகம்மட்  சாலே  இஸ்மாயிலும்  பிகேஆர்  உதவித்  தலைவர்  நுருல்  இஸ்ஸா  அன்வார்மீதும்  கட்சித்  தலைமைச்  செயலாளர்  சைபுடின்  நசுத்தியோன்  இஸ்மாயில்மீதும்  அவதூறு  வழக்கு தொடுத்துள்ளனர். 

என்எப்சி,  கேஎல் இகோ  சிட்டி-இல்,  ரிம12 மில்லியனுக்கு  எட்டு கொண்டோமினியம்கள்  வாங்கி  இருப்பதாக  அவ்விருவரும்  செய்தியாளர்  கூட்டமொன்றில்  தெரிவித்ததன் தொடர்பில்  அவர்கள்மீது  கடந்த  மாதம்  கோலாலும்பூர்  உயர்  நீதிமன்றத்தில்  வழக்கு  பதிவு  செய்யப்பட்டது. 

அவர்கள்  அவ்வாறு  கூறியது  தம்மைப் பற்றித் தப்பான  கருத்தை உருவாக்கியுள்ளது என்று அம்னோ மகளிர்  பகுதி  தலைவரான ஷரிசாட்  அப்துல்  ஜலிலின் கணவருமான முகம்மட்  சாலே  கூறினார்.