சுவாராம்: பேரணிகளில் குழப்பம் ஏற்பட போலீசே காரணம்

rallyமலேசியாவில்  அமைதி  ஆர்ப்பாட்டம்  என்பதே  கிடையாது  என்று  இன்ஸ்பெக்டர்-ஜெனரல் அப் போலீஸ்  கூறி இருப்பதை மனித  உரிமை  கண்காணிப்பு  அமைப்பான  சுவாராம்  மறுத்துள்ளது.

அமைதிப்  பேரணி  நடத்த  அரசியலமைப்பு  இடமளிக்கிறது. ஆனால், அரசியலமைப்பு  வழங்கும்  உரிமைகளை  போலீசார்  மதிக்கத்  தவறும்போதுதான்  அமைதிப்பேரணி  திசைமாறிப்  போய்விடுகிறது  என்றது  கூறிற்று.

“பொதுமக்களால்  பேரணிகளை  வன்முறையின்றி  அமைதியாக  நடத்த  முடியும் என்பதற்கு  பெர்சே,  ஹிம்புனான்  ஹிஜாவ்,  ஐஎஸ்ஏ-எதிர்ப்பு  இயக்கம்  போன்றவை  எடுத்துக்காட்டுகள்”, என   சுவாராம்  ஒருங்கிணைப்பாளர்  ஆர். தேவராஜன்  ஓர்  அறிக்கையில்  கூறினார்.  

“போலீசார்  அமைதிப்பேரணி  நடத்த  மக்களுக்குள்ள  உரிமைகளை  மதிக்காமல்  வன்முறை  கொண்டு  ஆர்ப்பாட்டக்காரர்களைக்  கலைக்க  முற்படும்போதுதான்  குழப்பம்  மூள்கிறது”, என்றாரவர். 

பேரணிகள்  அமைதியாக  நடந்தேறியதற்கு  ஒரு  பட்டியலைப்  போட்டுக்  காட்டிய  சுவாராம்  ஒருங்கிணைப்பாளர்  ஆர். தேவராஜன், ஆர்ப்பாட்டத்தைக்  கலைக்க  “வன்முறை”  பயன்படுத்தப்படும்போதுதான்  அமைதிப்பேரணி  கட்டுமீறி  போய்விடுகிறது.