‘மலாக்கா சுல்தான்’ எனத் தம்மைச் சுயமாக பிரகடனம் செய்து கொண்டிருக்கும் ராஜா நூர் ஜான் ஷா ராஜா துவா, மலாக்காவுக்கு அருகில் பூலாவ் புசாரில், ‘அரச’ விருதுகளையும் பட்டங்களையும் பதக்கங்களையும் வழங்கும் சடங்கு ஒன்றை நடத்த திட்டமிடப்பட்டிருப்பதற்கு எதிராக இரண்டு போலீஸ் புகார்கள் செய்யப்பட்டுள்ளன.
ஆயர் கெரோ போலீஸ் நிலையத்தில் அது பற்றி புகார் செய்த பூலாவ் புசார் பாதுகாப்புக் குழுத் தலைவர் அப்துல் கப்பார் அடான், அவ்வாறு செய்வது மாநில அரசமைப்புக்கு முரணானது என்றும் அதற்கு எதிராக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
“மாநில ஆளுநர் மட்டுமே அரச விருதுகளையும் பட்டங்களையும் வழங்க முடியும். இதை யாரும் கேலிக்கூத்தாக்க வேண்டாம்”, என்றாரவர்.
அண்மையில், ராஜா நூர் ஜான் ஷா, தம்மை மலாக்கா சுல்தானாக, அங்கீகரிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி முதலமைச்சர் இட்ரிஸ் ஹருனுக்கு ஒரு கடிதம் எழுதி இருந்தார். அனைத்துலக நீதிமன்றம் அந்த அங்கீகாரத்தை வழங்கி இருப்பதாகவும் அவர் கூறிக்கொண்டார்.
அப்படியென்றால் அனைத்துலக நீதிமன்றத்துடன் உறுதி செய்து கொள்ளுங்களேன். அப்போது நீயா, நானா! என்று தெரிந்து விடும்!
இந்த மாதிரி உல்ட்டா சுல்தானிடம் பட்டம் வாங்க காசு கொடுக்கும் சில வியாபார காந்தங்கள் மற்றும் தொழில் அதிபர்கள் இருக்கவே இருக்கிறார்கள். யார் பட்டம் கொடுத்தால் என்ன? தன்னை டத்தோ என்று சுடு காடு செல்லும் வரை கூப்பிட தான் பிறவி எடுத்து வந்தீர்கள? இந்த நய வஞ்சர்களுக்கு செலவு செய்வதை விட தான தர்மம் செய்து புண்யத்தை வாங்குங்கள், பட்டத்தை அல்ல!!!
போர்! போர்! போர்! போர் முரசு முழங்கட்டும்! அம்னோ ஆட்சியை வேரறுக்க இப்போதே தாக்குதலை நடத்துங்கள்!எங்கள் அதரவு உங்களுக்கே!
அட விடுங்கப்பா ! சுல்தான் எனச் சொல்லி பட்டம் கொடுத்து கொஞ்சம் சம்பாதித்து விட்டு போகட்டுமே..?