முன்னாள் போலீஸ் அதிகாரி ஜூட் பெரேரா வழக்குரைஞர் தொழில் செய்ய அனுமதி மறுப்பு

perriraவழக்குரைஞர்  மன்றம்,  முன்னாள் போலீஸ்  அதிகாரி  ஜூட் பெரேரா-வை   வழக்குரைஞர் தொழில் செய்ய  அனுமதிக்கக்கூடாது என்று  செய்துகொண்டிருந்த  மனுவை கோலாலும்பூர்  உயர்  நீதிமன்றம்,  ஏற்றுக்கொண்டது.  

பெரேரா, அன்வார்  இப்ராகிமின்  குதப் புணர்ச்சி  வழக்கில் முக்கிய  போலீஸ்  விசாரணை  அதிகாரியாக  இருந்தவர்  என்பது  குறிப்பிடத்தக்கது.
போலீஸ்  படையிலிருந்து  பணி ஓய்வு  பெற்ற  பெரேரா ஈப்போவில்  வழக்குரைஞராக  அனுமதி  கேட்டு  விண்ணப்பித்திருந்தார்.

அவர்  வழக்குரைஞராவதை  வழக்குரைஞர்  மன்றம்  ஆட்சேபித்திருந்தது.

அவர், கோலாலும்பூரில்  மெழுகுதிரி  ஏந்திய  போராட்டத்தில்  கைதான   ஐந்து  வழக்குரைஞர்கள்  தொடர்பில் மனித  உரிமை  கண்காணிப்பு  அமைப்பான  சுஹாகாம்  நடத்திய  விசாரணையில்  “ஒரு  நம்பத்தக்க  சாட்சியாக  நடந்துகொள்ளவில்லை”  என்பதை  அடிப்படையாக  வைத்து அது  ஆட்சேபம்  தெரிவித்திருந்தது.

வழக்குரைஞர்கள்  கைதான  சம்பவத்தில்  போலீஸ் மாவட்ட  அதிகாரி  வான் பாரி  வான்  அப்துல்  காலிட்டும் பெரேராவும்  மனித  உரிமைகளைமீறி  இருப்பதும்  அவ்விசாரணையில்  தெரிய  வந்தது. 

அதன் அடிப்படையில்,  பெரேரா “மலேசிய  உயர் நீதிமன்றத்தில்  வழக்குரைஞராக  இருப்பதற்குத்  தகுதியற்றவர்  என்று  வழக்குரைஞர்  மன்றம்  கூறி  இருந்ததை   நீதிபதி  சலேகா  யூசுப்  ஏற்றுக்கொண்டார்.