ஊழல்களுக்கு எதிராக நடவடிக்கை இல்லை … தெரு ஆர்ப்பாட்டங்கள்தான்

rafiziபிகேஆர்  எம்பி,  மார்ச்  மாதம்  மலேசிய  ஊழல்தடுப்பு  ஆணைய (எம்ஏசிசி)  சட்டத்தில்  எதிர்பார்க்கப்படும்  திருத்தங்களைச் செய்த  பின்னரும்  எம்ஏசிசி-யால்  விசாரிக்கப்படும்  சில  முக்கிய  புள்ளிகள்  தண்டிக்கப்படாமல்  போனால் மிகப்  பெரிய  அளவில்  பேரணிகள்  நடத்தப்படும்  என  எச்சரித்துள்ளார். தாங்களே அவற்றைத்  தூண்டிவிடப்போவதாகவும்  அவர்  தெரிவித்தார்.

சட்டத்தில்  ஓட்டைகள்  இருப்பதால்  பெரும் புள்ளிகளுக்கு  எதிராக  வலுவான  வழக்கைக்  கொண்டு  வர  முடிவதில்லை  என எம்ஏசிசி  கூறி  வந்திருப்பதை  பாண்டான்  எம்பி  ரபிஸி  ரம்லி  சுட்டிக்காட்டினார்.

“அரசாங்கத்துக்கும்  எம்ஏசிசி-க்கும்  முன்கூட்டியே  விடுக்கப்படும்  எச்சரிக்கை. இது.  (ஊழல்களுக்கு எதிராக) சரியான நடவடிக்கைகளை  எடுக்காவிட்டால்  மக்கள்  வெறுப்படைந்து  தெரு  ஆர்ப்பாட்டங்களில்  இறங்கி  விடுவார்கள்”. ரபிஸி, நேற்றிரவு  உழல்-எதிர்ப்புக்  கருத்தரங்கமொன்றில் இவ்வாறு  கூறினார்.

எம்ஏசிசி  சட்டத்தில்  திருத்தம்  கொண்டுவர  மார்ச் மாத  நாடாளுமன்றக்  கூட்டத்தில்  சட்ட முன்வரைவு  தாக்கல்  செய்யப்படும்  என  எதிர்பார்க்கப்படுகிறது.