ஜெப்ரி: சாபா மக்களுக்கு வெள்ள உதவி கிடையாதா?

1 sabahதிரெங்கானுவிலும்  பாகாங்கிலும்  வெள்ளத்தால்  பாதிக்கப்பட்டவர்களுக்கு  ரிம20 மில்லியன்  மதிப்புள்ள  உதவி  வழங்கப்படும்  என  அறிவித்த  பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக், தங்களுக்கு ஒரு  உதவியும்  வழங்காதது  ஏன்  என்று   சாபா, சரவாக்  மாநிலங்களில்  வெள்ளத்தால்  பாதிக்கப்பட்டவர்கள்  கேள்வி  கேட்கின்றனர். 
“தீவகற்பத்தில்  வெள்ளத்தால்  பாதிக்கப்பட்டவர்களுக்கு  உதவிக்குமேல்  உதவி  செய்யப்படுவதைப்  பார்க்கும்  சாபா,  சரவாக்  மக்கள்  மிகவும்  ஏமாற்றமடைந்திருப்பார்கள்”, என ஸ்டார்  சாபா  கட்சித்  தலைவர்  ஜெப்ரி  கிட்டிங்கான்  கூறினார்.

தொலைக்காட்சிப்  பெட்டிகளும்  இதர  பொருள்களுமாக  கூட்டரசு  அரசாங்கத்தின்  ரிம9.6 மில்லியன்  பெறுமதியுள்ள  உதவிப்  பொருள்களைப்  பிரதமர்  தம்  கைப்பட்ட  எடுத்து  வழங்கியுள்ளார்.  மேலும், ரிம10 மில்லியன்  உதவி  வழங்கப்படும்  என  விவசாயம்  விவசாயம் சார்ந்த-தொழில்கள்  அமைச்சு  அறிவித்துள்ளது  என  ஜெப்ரி  குறிப்பிட்டார்.

“உதவிப்  பொருள்களைப்  பிரதமரே  எடுத்து  வழங்கினார். உதவிப்  பொருள்களில்  தொலைக்காட்சிப்  பெட்டிகள்,  குளிர்பதனப் பெட்டிகள், தலையணைகள், மெத்தைகள்,  அடுப்புகள்  முதலியவை  உள்ளிட்டிருந்தன.

“துரதிர்ஷ்டவசமாக, சாபாஹான்களுக்கு  எதுவும்  கிடைக்கவில்லை. சல்லி காசுகூட  இல்லை.  ஒரு  தலையணைகூட இல்லை”, என்றாரவர். 

“ரிம10 மில்லியன்  உதவியில்  சரவாக்கில்  பாதிக்கப்பட்டவர்களுக்கு  ரிம1.5 மில்லியன்  ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால், சரவாக்கியர்களுக்கு  ஏற்பட்ட  இழப்பு  எவ்வளவு  என்பதைக்  கண்டறிய  எந்த  முயற்சியும்  மேற்கொள்ளப்படவில்லை.

“அத்துடன்,  உதவியில் 15  விழுக்காடு சரவாக்கியர்களுக்கு.  85 விழுக்காடு  பகாங்,  திரெங்கானு, கிளந்தானுக்கு.  இது  நியாயமா?”, எனவும் வினவினார்.

சாபா, சரவாக்  இல்லை  என்றால்  மலேசியா  இல்லை  என்பதையும்  அவர்  புத்ரா ஜெயாவுக்கு  நினைவுறுத்தினார்.