மேயர்: வரி உயர்வுக்கு எதிராக 166,000 ஆட்சேபணைகள்

dbklகோலாலும்பூர்  மாநகர்  ஆட்சி  மன்ற(டிபிகேஎல்)த்தின் சொத்து  மதிப்பீட்டு  வரியை  உயர்த்தும்  முடிவுக்கு  இதுவரை மாநகர்  சொத்துரிமையாளர்களில்  166,000 பேர்  ஆட்சேபணை  தெரிவித்திருக்கிறார்கள்  என மேயர் அஹ்மட்  பீசல்  தாலிப்  கூறினார்.

“மார்ச்  31வரை  ஆட்சேபணை  தெரிவிக்கலாம். தொடர்ந்து  ஆட்சேபணைகள்  வந்து  கொண்டிருந்தால்  ஆட்சேபணைக்  காலத்தை  நீட்டிப்பது  பற்றி  டிபிகேஎல்  பரிசீலிக்கும்”, என்றவர்  கோலாலும்பூரில்  செய்தியாளர்  கூட்டமொன்றில்  தெரிவித்தார்.