எம்ஏசிசி: ஊழலை வெறும் “நினைப்புத்தான்” எனக் குறைத்து மதிப்பிடவில்லை

maccமலேசிய  ஊழல்தடுப்பு  ஆணையம் (எம்ஏசிசி), ஊழலை எதிர்க்கும்  கடப்பாடு  தனக்கு  உண்டு  என்பதை  உணர்ந்தே  செயல்படுவதாகவும்  அவ்விவகாரத்தை  என்றும்  “குறைத்து மதிப்பிட்டது”  இல்லை  என்றும்  கூறியது. 

அந்த  ஆணையத்தின்  தலைவர்  அபு  காசிம்  முகம்மட்  ஊழல்  என்பது  வெறும்  “நினைப்புத்தான்” என்று  சொன்னதே  இல்லை  என அதன்  வியூக  தொடர்பு  இயக்குனர்  அஸ்மி  அலியாஸ் மலேசியாகினிக்கு  அனுப்பிவைத்த  அறிக்கையில்  கூறி இருந்தார்.

நாட்டின்  முக்கிய  கணக்கீட்டு நிறுவனமான கேபிஎம்ஜி  அதன்  ஆய்வில்  கண்டறிந்தவற்றை  அபு  காசிம்  “குறைத்து மதிப்பிட்டார்”  என  மலேசியாகினியில்  வெளியான  செய்திக்கு  அவரது  எதிர்வினை  அவ்வாறு அமைந்திருந்தது.

“அந்த ஆய்வின்  முடிவுகளுக்கு  முக்கியத்துவம்  கொடுக்கவில்லை  என்றால்  அபு காசிமும்  மற்ற  உயர்  அதிகாரிகளும்  அந்நிகழ்வுக்கு (கேபிஎம்ஜி  அறிக்கை  வெளியீட்டு விழாவுக்கு)ச்  சென்றிருக்க  மாட்டார்கள்  என்பதையும்  எம்ஏசிசி  தெரிவித்துக்கொள்ள  விரும்புகிறது”, என  அவ்வறிக்கை  கூறியது.