‘துடோங்’ விவகாரம் தொடர்பில் மன்னிப்பு கேட்க வேண்டும்

1 tudongஒரு முஸ்லிம்  ஆசிரியையிடம்  அவரது  “துடோங்”கை  அகற்றச்  சொன்னவர்கள்  24 மணி  நேரத்துக்குள்  மன்னிப்பு  கேட்க  வேண்டும்  என  அம்னோ இளைஞர் கல்விப்  பிரிவு  கோரிக்கை  விடுத்துள்ளது. 

மன்னிப்பு  கேட்கப்படாவிட்டால்  கல்வி  அமைச்சு  அப்பள்ளி  தலைமையாசிரியரை  பணிநீக்கம்  செய்ய  வேண்டும்  என  அப்பிரிவின்  தலைவரும்  இளைஞர்  பகுதி  நிர்வாகக்  குழு  உறுப்பினருமான  முகம்மட்  ரபிக்  நய்ஸாமொய்தின் கூறினார்.

“முஸ்லிம்களின்  உணர்வுகளைப்  புரிந்துகொள்ள  முடியாத  ஒருவர்  தலைமையாசிரியராக  இருக்கத்  தகுதி  அற்றவர்”, என்றாரவர்.

அவ்விவகாரத்தைக்  கண்டிப்பதில் கல்வி  அமைச்சர்கள்  முகைதின்  யாசினையும்  இட்ரிஸ்  ஜூஸோவையும்   “தாமதம்” காட்டுவதாகவும்  அவர்  குறைகூறினார்.

கோத்தா  திங்கி,  எஸ்ஜேகேசி நன்  யா-வில்  முஸ்லிம்  ஆசிரியை  ஒருவரிடம்  அப்பள்ளியில்  தொடர்ந்து  பணியாற்ற விரும்பினால்  “துடோங்”கை  அகற்ற  வேண்டும்  என்று  சொல்லப்பட்டதாம்.