மசீச: கைப்பற்றிய பைபிள்களைத் திருப்பிக் கொடுப்பீர்

1-mcaசிலாங்கூர்  அரசு  தன்  பொறுப்பைத்  தட்டிக்  கழிக்காமல்  சிலாங்கூர்  இஸ்லாமியத்  துறை(ஜயிஸ்),  மலேசிய  பைபிள்  கழகத்தில் அதிரடிச்  சோதனை  நடத்தியபோது  கைப்பற்றிய  பைபிள்  பிரதிகளைத்  திருப்பிக்  கொடுக்க  வேண்டும்  என்று மசீச  வலியுறுத்தியுள்ளது.

சர்ச்சைக்குரிய  அதிரடிச்  சோதனை  குறித்து  பக்காத்தான்  ரக்யாட்டால்  வழிநடத்தப்படும்  மாநில  அரசு  விளக்கம்  கொடுத்ததே  தவிர,  அந்த  மலாய்மொழி,  ஈபான்  மொழி  பைபிள்கள்  திருப்பிக்  கொடுக்கப்படுமா,  இல்லையா  என்பது  பற்றி  எதுவும்  சொல்லவில்லை  எனக்  கட்சியின்  சமய  நல்லிணக்கப்  பிரிவுத்  தலைவர்  டி  லியான் கெர்  கூறினார்.

“சிலாங்கூர்  அரசு  தன்  செயலைத்  தற்காத்துப்  பேசுவதை விடுத்து  நடந்ததற்கு  மன்னிப்பு  கேட்டுக்கொண்டு  பைபிள்களைத்  திருப்பிக்  கொடுக்க  வேண்டும்”,  என்றாரவர்.