ஆட்சிக் குழுதான் அஸ்மியை நீக்க உத்தரவிட்டதாம்- பிகேஎன்எஸ் கூறுகிறது

azminசிலாங்கூர் மாநில  மேம்பாட்டுக்  கழகம் (பிகேஎன்எஸ்), பிகேஆர்  துணைத்  தலைவர் அஸ்மின்  அலியின்  பிகேஎன்எஸ் இயக்குனர்  பதவியை  நீட்டிக்க  வேண்டாம்  என மாநில  ஆட்சிக்குழுவிடமிருந்து  உத்தரவு வந்ததாகக்  கூறுகிறது.

“பிகேஎன்எஸ் சட்டவிதிகளின்படி  வாரிய  உறுப்பினர்களை  நியமனம்  செய்யும்  அதிகாரம்  மாநில  ஆட்சிக்குழுவுக்குத்தான்  உண்டு, பொது  மேலாளருக்கு இல்லை”, என அதன்  செயல்முறை  செயலாளர்  நோரிடா  முகம்மட்  சித்திக்  நேற்று  ஓர்  அறிக்கையில்  கூறி  இருந்தார்.

இது, மந்திரி  புசார்  அப்துல்  காலிட்  அளித்த  விளக்கத்துக்கு  நேர்முரணாக  உள்ளது.

அவர்,  அஸ்மினின் ஒப்பந்தத்தை  நீட்டிப்பதில்லை  என  முடிவெடுத்தவர்  பிகேஎன்எஸ்  பொது  மேலாளர்  ஒத்மான்  ஒமார்  என்று  கூறி  இருந்தார்.