கேஜே: பொருள்கள் விலை கூடியதற்கு எரிபொருள் விலை உயர்வு காரணமல்ல

1 priceஉணவுப்பொருள் விலைகள்  மிகவும்  உயர்ந்து  போயிருப்பதற்கு  எரிபொருள்  விலை  உயர்வு  காரணமல்ல  என்கிறார்  இளைஞர், விளையாட்டு  அமைச்சர்  கைரி  ஜமாலுடின்.

இன்று   கோலாலும்பூர்  மொத்த  விற்பனைச்  சந்தைக்குச்  சென்று  பார்வையிட்ட  கைரி,  பொருள்கள்  விலை  உயர்ந்ததற்கு  மோசமான  வானிலையும் பொருள்களின்  வரத்து  குறைந்து  போனதுமே  காரணம் என்பதை  அங்கு  தெரிந்துகொண்டதாகக்  கூறினார்.

“பெட்ரோல்  விலை  உயர்வால் மொத்தவிற்பனைச்  சந்தையில்  பொருள்களின்  விலை  பெரிதாக  பாதிக்கப்படவில்லை”, என்றாரவர்.

எனவே, உதவித் தொகைகள்  குறைக்கப்பட்டதுதான்  விலை  உயர்வுக்குக்  காரணம்  என்று  சொல்லப்படுவதில்  உண்மை  இல்லை  என  அம்னோ  இளைஞர்  பகுதித்  தலைவருமான  கைரி  கூறினார்.