சிலாங்கூர் மாநில மேம்பாட்டுக் கழக (பிகேஎன்எஸ்) இயக்குனர் பொறுப்பிலிருந்து அஸ்மின் அலியை நீக்க யாரும் உததரவிடவில்லை என்றால் அவரைத் திரும்பவும் இயக்குனராக அமர்த்தலாமே என்று அன்வார் இப்ராகிம் கூறினார்.
இயக்குனர் வாரியத்திலிருந்து அஸ்மின் நீக்கப்பட்டதில் சரியான நடைமுறை பின்பற்றப்படவில்லை என்பது தெரிகிறது என்றாரவர்.
“மாநில அரசு அதை ஒப்புக்கொள்கிறது, மந்திரி புசார் ஒப்புக்கொள்கிறார். பிகேஎன்எஸ் உத்தரவுப்படி நடந்துகொண்டதாகக் கூறுகிறது”.
இந்நிலையில் அவருக்குக் கொடுக்கப்பட்ட பணிநீக்க கடிதத்தைத் திரும்பப் பெற்றுகொண்டு அவரை மீண்டும் இயக்குனராக நியமிக்குமாறு அன்வார், மந்திரி புசார் அப்துல் காலிட் இப்ராகிமுக்குப் பரிந்துரைத்தார்.
சிலாங்கூர் மந்திரி புசாரை மாற்றப்போவதாக ‘வதந்தி’ அடிபடுகிறதே என்றும் அன்வாரிடம் வினவப்பட்டது. அதற்கு அவர், அது வதந்திதானே, உண்மை இல்லையே, பிறகு ஏன் உறுதிப்படுத்த வேண்டும் என்றும் திருப்பி வினவினார்.
இருந்தவனும் சரியில்ல …இப்ப இருப்பவனும் சரியில்ல… !
சென்ற தேர்தலுக்கு பிறகு ஆட்சி மன்ற உறுப்பினர்களை நியமிப்பதில் சுல்த்தான் மேல் பலியை போட்டு தப்பித்து க்கொண்டார் காலிட்,காலிட் பழைய இனவெறி கொள்கையிலிருந்து மாறவில்லை போல் தோன்றுகிறது,எனக்கு காலிட்டின் போக்கு பிடிக்கவில்லை !14ஆயிரம் சம்பளத்தை 29க்கு உயர்த்தி கொண்டாரே விலைவாசி ராக்கெட்டு வேகத்தில் வின்னை தொடும் நிலையில் சுல்த்தானின் அனுமதி பெற்றாரா ?