லியோ தியோங் லாய் மசீச தலைமைப்பொறுப்பை ஏற்று ஒரு மாதம்கூட ஆகவில்லை, அதற்குள் அவர்மீது குற்றம் சாட்டத் தொடங்கி விட்டார் முன்னாள் தலைவர் டாக்டர் சுவா சொய் லெக். தங்களுக்கிடையில் செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தத்தை லியோ மதிக்கத் தவறிவிட்டார் என்று பொறுமினார் அவர்.
பெட்டாலிங் ஜெயாவில் செய்தியாளர் கூட்டமொன்றில் இரண்டு ஒப்பந்த பத்திரங்களைக் காண்பித்த சுவா, அவற்றை லியோ மதிக்கவில்லை என்றார்.
2010-இல், தாம் மசீச தலைவர் பதவிக்கும், அவர் துணைத் தலைவர் பதவிக்கும் போட்டியிடுவது என்ற ஏற்பாட்டுக்கு ஒப்புக்கொண்ட லியோ, பின்னர் ஒங் கா திங் தலைவர் பதவிக்குப் போட்டியிடுவதற்கு ஆதரவு காட்டினாராம்.
பின்னர், 2013 கட்சித் தேர்தலில், சுவா, போட்டியிடாமல் ஒதுங்கிக்கொள்வது, பதிலுக்கு லியோ சுவாவின் ஆள்களைத் தலைமைச் செயலாளராகவும், மூன்று மாநிலங்களில் மசீச தலைவர்களாகவும், மூவரை மத்திய செயலவையிலும், சுவாவை ஒரு ஜிஎல்சி வாரிய உறுப்பினராகவும் நியமிப்பது என இருவருக்குமிடையில் ஓர் ஏற்பாடு செய்துகொள்ளப்பட்டதாம்.
லியோ செய்வதாகச் சொன்னதில் “99 விழுக்காடு” நிறைவேற்றவில்லை என சுவா சாடினார்.
“இரண்டு ஒப்பந்தங்களை மீறியதால், வெளிப்படையாகக் கூறுகிறேன், அவர் நம்பத் தகாதவர்”, என்று சுவா கூறினார்.
ச்சே, ச்சே, ம.சீ.ச. இவ்வளவு கேவலமாகவும், கீழ்த்தரமாகவும் நடந்துக் கொள்ளக் கூடாது. இதற்கு மேலும் இப்படி ஒரு கட்சி சீனர்களுக்குத் தேவையா? தேர்தலில் ம.சீ.ச. தோற்றத்தில் ஆர்ச்சரியம் ஒன்றும் இல்லை.
லியோ தியோங் லாய் ஏற்கனவே முன்னாள் ம சீ ச தலைவர் ஒங் தீ கியாட் அவர்களை அரசியல் துரோகம் செய்தவர்தான், போயும் போயும் டாக்டர் சுவா சொய் லெக், லியோ தியோங் லாயின் அரசியல் வாக்குறிதியை எப்படி நம்பினாரோ ஆச்சரியமாய் இருக்கிறது. அரசியலில் இதெல்லாம் சகஜம் அப்பா என்று சொன்ன கவுண்டமணியின் ஞாபகம்தான் வருது.