பிட்ட ஆட்டத்தைவிட கங்கோங் ஆர்ப்பாட்டம் மோசமானதல்ல

anwarபிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக், விலைவாசி  உயர்வினால்  பாதிக்கப்படாதிருக்க  “கங்கோங்”  கீரை  சாப்பிடலாமே  என்று  சொல்லப்போக  அது  பெரும் சர்ச்சையை  உண்டுபண்ணியது.  இணையத்தளத்தில்  அதைக்  கேலி  மிகப் பலர்  கேலியும்  கிண்டலும்  செய்து  பதிவிட்டிருந்தனர். பினாங்கில்,  அதைக்  கேலி  செய்து ஆர்ப்பாட்டம்  ஒன்றும்  நடந்தது. 

மாச்சாங்  பூபோக்  சட்டமன்ற  உறுப்பினர்  லீ  காய்  லூன்  புதன்கிழமை  அதை  ஏற்பாடு  செய்திருந்தார்.

அந்த  ஆர்ப்பாட்டத்தில்  கலந்துகொண்ட  15 பேர்,  நஜிப்பைப்  பிரதிபலிக்கும்  பொம்மை  ஒன்றின்  வாய்க்குள்  கங்கோங்  கீரையைத்  திணித்தனர்.
அம்னோ  தலைவர்கள்  பலரும்  அதை  “மரியாதைக் குறைவான,  சிறுபிள்ளைத்தனமான  செயல்  என்றும்  அப்படிப்பட்ட  செயலில்  ஈடுபடுவது  ஒரு  சட்டமன்ற  உறுப்பினருக்கு  அழக்கல்ல”  என்றும்  கண்டித்திருந்தனர்.

ஆர்ப்பாட்டக்காரர்களைத்  தற்காத்துப்  பேசிய பிகேஆர்  நடப்பில்  தலைவர்  அன்வார்  இப்ராகிம், 2012-இல்  முன்னாள்  பெர்சே  ஒருங்கிணைப்பாளர்  அம்பிகா  ஸ்ரீநிவாசனுக்கு  முன்னால்  முன்னாள்  இராணுவ  வீரர்கள்  பிட்டத்தை  அசைத்து  அசைத்து  ஆடினார்களே  அதைவிட  இது  ஒன்றும்  மோசமானதல்ல  என்றார்.

“பிட்டத்தை  அசைத்து  அசைத்து  அவர்கள்  ஆடியபோது  மட்டும்  எந்த  எதிர்ப்பும்  தெரிவிக்கப்படவில்லையே,  ஏன்?  அது  மட்டும்  சமய  அடிப்படையில்  அல்லது  ஒழுக்கநெறி  சம்பந்தப்பட்டவரை  சரியான  செயலா?”,  என  அன்வார்  வினவினார்.