அண்டார்டிகா போகிறாராம் அஹ்மட் சைட்

ahmad saidதிரெங்கானு  மந்திரி  புசார்  அஹ்மட்  சைட் (இடம்)  ஒரு குழுவுக்குத்  தலைமையேற்று  தென் துருவத்துக்கு  15-நாள்  பயணம்  மேற்கொள்ளப்போவதாக  அறிவித்துள்ளார். 

“வானிலை  மாற்றம்  பற்றிய  ஆராய்ச்சியில்  மலேசியாவின்  பங்கும்  இருக்க  வேண்டும்”  என்பதற்காகவே  அப்பயணம்  மேற்கொள்ளப்படுவதாக  மந்திரி  புசார்  அலுவலகத்தின்  அறிக்கை  ஒன்று  கூறிற்று.

இந்த  15-நாள்  பயணம்,  மலேசியாவுக்கு  எந்த  வகையில்  நன்மை  அளிக்கப்போகிறது  என்று  கேள்வி  எழுப்பியுள்ளார்  பெட்டாலிங் உத்தாரா எம்பி  டோனி  புவா  வினவுகிறார்.

அந்த “ஆராய்ச்சி”  மலேசியாவுக்குச்  சாதகமாக  இருக்காது.  அப்படி  இருக்க  எதற்காக  மக்களின்  வரிப்பணத்தைச்  செலவிட  வேண்டும்? 

வானிலை  ஆய்வில்  கல்வியாளர்கள்  ஆர்வம்  கொண்டிருந்தால்  நம்  அமைச்சர்களை  ஏன்  அங்கு  அனுப்ப  வேண்டும்? 

அவர்,  நாட்டின்  அறிவியல்,  தொழில்நுட்ப  அமைச்சரோ  இயற்கை  வள,  சுற்றுச்சூழல்  அமைச்சரோ  அல்லவே. 

திரெங்கானு  மந்திரி  புசாரான  அவருக்குத்  தென் துருவத்தில்  என்ன  வேலை? 
அவர்  வணிகத்தைப்  பெருக்க  அண்டார்டிகா  செல்வதாகவும்   சொல்ல  முடியாது.  அங்கு  பெங்குயின்  பறவைகள்  மட்டும்தான்  உள்ளன. 

இவ்வாறு  டோனி  புவா  அறிக்கை  ஒன்றில்  கூறினார்.