டிஎபிக்கு இன்னொரு மே 13 வேண்டுமா?, அம்னோக்காரர்களின் கூப்பாடு

 

DAP - May 13 again1பிரதமர் நஜிப்பின் கங்கோங் கீரை கூற்றை கேலி செய்து மாச்சாங் பூபுக் சட்டமன்ற உறுப்பினர் லீ காய் லூன் நடத்திய ஆர்ப்பாட்டம் அம்னோ உறுப்பினர்களுக்கு சினம் மூட்டியதால், அவர்கள் செபெராங் ஜெயாவில் லீயின் பண்பற்ற நடத்தைக்கு ஆட்சேபம் தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

அம்னோ மாநில தலைவர்கள் உட்பட சுமார் 600 பேர் சன்வே கார்னிவல் மாலின்முன் நடந்த அந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.

அதற்கு முன்னதாக, ஒரு கூட்டத்தினர்” அல்லாஹூ அக்பர்” மற்றும் “ஹிடுப் மெலாயு” என்று கத்திக் கொண்டு ஊர்வலமாக சென்றனர்.

“பிஎம்மை (பிரதமரை) அவமதிப்பது மலாய்க்காரர்களை அவமதிப்பதாகும்”, “பினாங்கு மலாய்க்காரர்கள் கங்கோங் கீரையை சாப்பிட்டு வாழ்கின்றனர்”, “ABCD – Asal Bukan Cina” மற்றும் டிஎபி இஸ்லாத்தின் எதிரி” என்ற வாசகங்கள் பொரிக்கப்பட்டிருந்த பதாகைகளை ஏந்திச் சென்றனர்.

இவற்றில் கவனத்தை ஈர்த்தது இரத்த சிவப்பு நிறத்திலான பதாகையாகும். அதில் “டிஎபி தலைவர்களின் வாயின் காரணமாக மே 13, 1969 நடந்தது … இன்னும் வேண்டுமா?” என்று எழுதப்பட்டிருந்தது.

அக்கூட்டத்தில் பேசியவர்களில் கெபலா பத்தாஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ரீஸால் மரைக்கான், மாநில அம்னோ செயலாளரும் புக்கிட் மெர்தாஜாம் தலைவருமான மூசா ஷீக் ஃபாட்சிர், மாநில அம்னோ இளைஞர் பிரிவு தலைவர் ராபிஸால் ரஹிம் மற்றும் இளைஞர் பிரிவு முன்னாள் தலைவர் ஷீக் ஹுசேன் மைடின் ஆகியோர் அடங்குவர்.

கெடா மாநில கித்தா கட்சியின் முன்னாள் தலைவர் ஸாமில் இப்ராகிம் மற்றும் மாநில பெர்காசா இளைஞர் பிரிவு தலைவர் ரிட்சுவான் அஸுடின் ஆகியோரும் அங்கு இருந்தனர். ஆனால், அவர்கள் கூட்டத்தில் பேசவில்லை.

முதல் தவணை சட்டமன்ற உறுப்பினரான லீக்கு பின்னால் ஒளிந்துகொள்ள வேண்டாம் என்று ரீஸால் டிஎபி தலைவர்களை கேட்டுக்கொண்டார்.

“பிரதமர் செய்த தவறு என்ன? நாங்கள் மாநில அரசாக இல்லாதிருந்த போதிலும் அவர் பினாங்கிற்கு வந்து கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் கலந்து கொண்டார்”, என்று ரீஸால் மேலும் கூறினார்.

“கங்கோங் இப்போது ஒரு பிரச்சனையாகியுள்ளது. அவர்கள் செய்வதற்கு வேறொன்றும் இல்லாதது போல் இருக்கிறது:, என்று ஜமில் கூறினார்.

“பிரதமரின் பேச்சை புரிந்து கொள்ளாத அளவிற்கு அவர்கள் (பக்கத்தான் தலைவர்கள்) அவ்வளவு முட்டாள்களா?” என்று அவர் வினவினார்.

 

 

 

 

 

 

TAGS: