இஸ்லாம் சந்தப்பட்ட விசயங்கள் மாநில விவகாரம் என்பதால் தேசிய ஃபாட்வா மன்றத்திற்கு சட்டப்பூர்வமான தகுதி இல்லை என்று அரசமைப்புச் சட்ட வல்லுனர் அப்துல் அசிஸ் பாரி கூறுகிறார்.
“தேசிய ஃபாட்வா மன்றத்தின் தீர்மானத்திற்கு சட்டப்பூர்வமான தகுதி இல்லை ஏனென்றால் இஸ்லாம் மாநிலங்களின் விவகாரமாகும். அம்மாதிரியான அமைப்புக்கு அரசமைப்புச் சட்ட தகுதி இல்லை.
“இஸ்லாத்தை மாநிலங்களின் பொறுப்பில் விட்டுள்ள மத்திய-மாநில அதிகாரப் பகிர்வு அரசமைப்புச் சட்டத்தில் இடம் பெற்றுள்ளதாகும்”, என்று அவர் இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் கூறியுள்ளார்.
அந்த அடிப்படையில், சிலாங்கூர் இஸ்லாமிய விவகார இலாகா (ஜாயிஸ்) ஜனவரி 2 இல் மலேசிய பைபிள் கழகத்தில் நடத்திய அதிரடிச் சோதணைகள் குறித்து ஃபாட்வா மன்றம் கூறிய எதுவும், அது முஸ்லிம்கள் பற்றியதாக இருந்தாலும் சரி அல்லது முஸ்லிம் அல்லாதவர்கள் பற்றியதாக இருந்தாலும் சரி, எவ்வித விளைவையும் ஏற்படுத்தாது என்பதை அவர் வலியுறுத்தினார்.
“மாநில முப்திகள் தனிப்பட்ட அடிப்படையில் வெளியிடும் கருத்துகள்கூட, அந்த குறிப்பிட்ட மாநில சட்டமுறைகளுக்கு ஏற்ப வெளியிடப்படாதவை என்றால், கட்டுபடுத்தக்கூடியவை அல்ல.
“அவை முப்திகளின் தனிப்பட்ட கருத்துகளாகவே இருக்கும். அவை நீதிமன்ற தீர்ப்புகளிலிருந்து வேறுபட்டவையாகும். நீதிமன்ற தீர்ப்புகள் நாட்டின் சட்டங்களின் ஒரு பகுதியாகும்”, என்று பாரி குறிப்பிட்டார்.
வெவ்வேறு மாநிலங்கள் வெளியிடும் ஆணைகளிலும் முரண்பாடுகள் இருப்பதை அவர் சுட்டிக் காட்டினார்.
“இதில் சுவாரஸ்யமானது, பல விவகாரங்களில், புகைபிடித்தல் போன்றவற்றில், முப்திகள் ஒருமித்த தீர்ப்புகள் அளிப்பதில்லை.
“இது ஹராம் என்று சிலர் தீர்ப்பளிக்கின்றனர்; சிலர் அனுமதிக்கப்படாதது என்கின்றனர்”, என்று பாரி மேலும் கூறினார்.
சம்பந்தப்பட்ட மாநில சட்டங்களில் கூறப்பட்டுள்ளவை மட்டுமே அம்மாநிலத்திலுள்ள முஸ்லிம்களை கட்டுப்படுத்தும் என்று அவர் மேலும் கூறினார்.
வுன்மைகள் மறையாது