ஆக, மே 13 கலவரங்களுக்குத் தானே காரணம் என்பதை அம்னோ ஒப்புக்கொள்கிறது

umnoஉங்கள்  கருத்து: ‘உண்மையில்,  அம்னோ  இந்த  மே  13-ஐச்  சொல்லியே  சீனர்களை  மிரட்டத்  தவறுவதில்லை’

அம்னோ  ஆர்ப்பாட்டக்காரர்கள்:  இன்னொரு  மே 13  நடப்பதைத்தான்  டிஏபி  விரும்புகிறதா?

தொலு :  மக்களின்  பொருளாதார  அவல நிலையைக் கண்டுகொள்ளாமலிருப்பதற்கு  எதிர்வினையாகத்தான்  பிரதமரை  இலக்காக  வைத்து  கிண்டலும்  கேலியும்  செய்யப்படுகிறது.  இது,  ஒரு  இனம்  இன்னொரு  இனத்தைக்  கிண்டல்  செய்யும்  விவகாரம்  அல்ல,  எல்லா  இனங்களையும்  பாதிக்கும்  வாழ்க்கைச்  செலவு  அதிகரிப்புப்  பற்றியது.

அத்தியாவசிய  பொருள்களின்  விலை  உயர்ந்ததால்  மலாய்க்கார்கள்  பாதிக்கப்படவில்லையா?  கங்கோங்  விவகாரத்தை  அம்னோ  கட்சியினர்  இன  விவகாரமாக்க  முயல்கிறார்கள்.

அதை  வைத்து  மே  13  என்று பூச்சாண்டி  காண்பிப்பது  பொறுப்பற்ற  செயலாகும். இன்னும்  சொல்லப்போனால்,  அது  தேச நிந்தனைக்  குற்றமுமாகும்.

சாலி  தம்பாப்: உண்மையிலேயே மலேசியாமீது  பற்றுள்ளவர்கள் இதற்கு  இடமளிக்கக்கூடாது. அதனால்  யாருக்கும்  நன்மை  இல்லை.

கே.கே.  ஜான்:  மே  13 கலவரத்தைத்  தெரிந்தே தொடங்கியவர்கள்  இந்த  அம்னோ தலைவர்களின்  மூத்தவர்கள்தானா?  அப்படியானால்,  வரலாற்றைத்  திருத்தி  எழுத  வேண்டுமே.

கேஎஸ்என்:  மே  13  நம்  வரலாற்றில்  ஏற்பட்ட  ஓர்  அவலம்.  நாட்டின்மீது  உண்மையான  அன்பு  வைத்துள்ள  மலேசியர்கள்  அனைவரும்  அதை மறக்கத்தான்  நினைக்கிறார்கள்.  அதைப்  பயன்படுத்தி  எதிரணியினரை  எச்சரிப்பது  ஒரு  நேரடி  மிரட்டல்  அல்லவா?

இதற்குப்  போலீஸ்  என்ன  செய்யப்போகிறது? இவர்களை  அப்படியே  விட்டுவைப்பது  இவர்கள்  தொடர்ந்து  விஷத்தைக்  கக்குவதற்கும்  மிரட்டல்  விடுவதற்கும்ம் ஊக்கமளிப்பதாகும்.

திறந்த  மனம்: அரசாங்கம்  இதற்கு  இடமளித்து  பாரபட்சமாக  நடந்துகொள்ளுமானால்  அதன்  விளைவு  எப்படியும்  அமையலாம். ஆனால்,  அது  நாட்டுக்கு  நல்லதாக  இருக்காது.

ஸ்வைபெண்டர்:  இன்னொரு  மே 13  வரும்  எனச்  சீனர்களை  அச்சுருத்த  அம்னோ  தவறுவதே  இல்லை.

சிஎச்கேஎஸ்:  இது, நாட்டின்  பொருளாதார  சிக்கலுக்குக்  காரணமான  உண்மையான  விவகாரங்களிலிருந்து  கவனத்தைத்  திசைதிருப்பும்  இன்னொரு  இனவாத  நாடகம்.

சமுராய்:  அம்னோ  கட்சியினரின்  அறிவுத்  திறத்தைப்  பார்த்தீர்களா?  விலையேற்றம்  ஏன்  என்ற  எளிய  கேள்விக்கு  விடையளிக்கவும்  அதற்கு   தீர்வு ஒன்றை  முன்னிறுத்தவும்  தெரியாதவர்கள்  சீனர்களை  இரத்தம்  சிந்த  வைப்போம்  என்று  மிரட்டுகிறார்கள்.

இபி:  அம்னோவும்  கெராக்கானும்  இன்னும்  எதற்காகக்  காத்திருக்க  வேண்டும்? பிஎன்-னை விட்டு  வெளியேறி  அவற்றின்  மரியாதையைக்  காப்பாற்றிக்  கொள்ள  வேண்டும்.

ரிலேக்:  இப்போதுதான்  தெரிகிறது.  மே  13-க்குக்  காரணம்  யார்  என்பதை  அவர்களே  ஒப்புக்கொண்டு  விட்டார்கள். நிச்சயமாக  அது  டிஏபி  அல்ல.