இன்று முதல் அமலுக்கு வரும் 2014 தேசிய வாகனக் கொள்கையைத் தொடர்ந்து 2018-க்குள் கார்களின் விலை 20-30 விழுக்காடு குறையும் என எதிர்பார்க்கலாம்.
கடந்த வாரம் அனைத்துலக வாணிப, தொழில்துறை அமைச்சு நடத்திய செய்தியாளர் கூட்டமொன்றில் கார் தயாரிப்புக்கான சட்டங்கள் தளர்த்தப்படுவது கார்களின் விலை குறைய காரணமாக இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டது.
இதன் தொடர்பில் மேல்விவரங்கள் இன்று பிற்பகல் தெரிவிக்கப்படும் என்றும் அதில் கூறப்பட்டது.
இன்று முதல் எந்தவொரு கார் தயாரிப்பு நிறுவனமும் அது 100 விழுக்காடு வெளிநாட்டவருக்குச் சொந்தமாக இருந்தாலும்கூட மலேசியாவில் கார் தயாரிப்புத் தொழிலில் ஈடுபடலாம்.
இனிக்கும் செய்தியை அளித்த அனைத்துலக வாணிப, தொழில்துறை அமைசுக்கு நன்றி. ஆனால் 2018இல் கார்களின் உபரிப் பாகங்களின் விலைகள் எப்படி இருக்குமோ?
அதற்குள் நாம் அனைவரும் பிச்சைக்காரர்கள் ஆகிவிடுவோம்! போதுமான அளவுக்கு அம்னோ கொள்ளையர்கள் நம்மை சுரண்டி விடுவார்கள்! AFTA உடன்பாடு என்ன செய்கிறது? ஏன் அண்டை நாடுகளில் உற்பத்தி ஆகும் வாகனங்கள் 200% வரி?
நானும் தேர்தலுக்குப் பிறகு மக்கள் கூட்டணி ஆட்சிக்கு வந்தால் கார் விலை குறையும். புதிதாக ஒன்றை வாங்கலாம் என்று எண்ணியதில் மண் விழுந்து விட்டது. அம்னோ அரசாங்கம் நிச்சயமாக 14-ம் தேர்தலுக்கு 6 மாதத்திற்கு முன் கலால் வரியைக் குறைத்து விலையை குறைக்க வைப்பார்கள். அதுவரை நம்மால் காத்திருக்க முடியாது. “என்னடி மீனாச்சி, தேர்தலில் சொன்னது என்னாச்சி” என்று பாட்டு பாடனும் போல தோணுது.