நேற்று அறிவிக்கப்பட்ட 2014-2020 தேசிய வாகனக் கொள்கை (என்ஏபி) நடப்பு கார் விலைகள் உயர்வாக இருப்பதற்கான அடிப்படைக் காரணங்களைக் கவனிக்கத் தவறிவிட்டது என்பதால் கார் விலைகள் குறையும் சாத்தியம் இல்லை என்று பிகேஆர் கருதுகிறது.
இறக்குமதி செய்யப்படும் கார்களுக்கு 110 விழுக்காடு சுங்க வரி, அங்கீகரிக்கப்பட்ட உரிமம்(ஏபி) வழங்கும் முறை தெளிவற்றிருப்பது பாரபட்சம் காட்டும் வரி ஊக்குவிப்பு கட்டமைப்பு முதலியவை அடிப்படை காரணங்களில் சில என்று பிகேஆர் வியூக இயக்குனர் ரபிஸி ரம்லி கூறினார்.
இது, தனக்குச் சாதகமான ஒரு நிலையை உருவாக்கிக் கொள்ள பிஎன் மேற்கொள்ளும் ஒரு முயற்சி என்று கூறிய அவர், வழக்கம்போல் இந்த வாக்குறுதியையும் அது நிறைவேற்றப் போவதில்லை என்றார்.
அம்னோ கவலைபடுவது மக்களை பற்றியல்ல. அவன்களின் மாமன் மச்சான் தோளான் துறுத்திய்யன்கள் பற்றி மட்டுமே.