ஜப்பானிய தூதரகத்திடம் பக்காத்தான் ஆட்சேபம் தெரிவித்தது

anwarஜப்பானுக்குச் சென்ற மாற்றரசுக் கட்சித்  தலைவர் அன்வார் இப்ராகிம்  அங்கிருந்து  திருப்பி  அனுப்பப்பட்டதன்  தொடர்பில் பக்காத்தான்  ரக்யாட்  ஜப்பானிய  தூதரகத்திடம்  ஆட்சேபக்  கடிதம்  ஒன்றைக்  கொடுத்துள்ளது.

அக்கடிதத்தில்,  அன்வார்  திருப்பி  அனுப்பட்டதற்கான  காரணத்தை ஜப்பானிய  தூதர்  ஷிகேரு  நகமுரா  விளக்க  வேண்டும்  என்ற  கோரிக்கை  விடுக்கப்பட்டிருந்தது.

தம் பயணத்துக்குத்  தடை  ஏதுமில்லை  என்பதைக்  கண்டறிந்த  பின்னரே  அன்வார்  ஜப்பானுக்குப்  புறப்பட்டுச் சென்றார்.

இந்நிலையில்,  “மாற்றரசுக்  கட்சித்  தலைவரும்  மலேசிய  நாடாளுமன்றத்தின்  மூத்த  உறுப்பினருமாகிய  அவர்  திருப்பி அனுப்பட்டதை  பக்காத்தான்  ரக்யாட்  வன்மையாகக்  கண்டிக்கிறது”,  என  அக்குறிப்பு  கூறியது.