தைப்பூசத்தைக் கேவலப்படுத்தும் டிவிட்டர் பதிவுகள்

1 pusamதைப்பூசக்  கொண்டாட்டத்தை  இழித்தும்  பழித்தும்  கூறும் பதிவுகள்  டிவிட்டரில்  வலம்  கொண்டிருக்கின்றன.

அவை  மலேசியாவில்  இன,  சமய  சகிப்புத்தன்மை  சீரழிந்து  வருவதற்கு  எடுத்துக்காட்டுகளாய்  விளங்குகின்றன.

இதற்கு  இன-அடிப்படையில்  அமைந்த  கட்சிகள்    தேர்தலில்  வாக்குகள்  பெறுவதற்காக இன,  சமய  உணர்வுகளைத்  தூண்டி  விடுவதுதான்  காரணம்  எனப் பார்வையாளர்கள்  கருதுகின்றனர்.

முகநூலில் இடப்பட்ட  ஒரு  பதிவு  குறித்து  மஇகா  போலீஸில்  புகார்  செய்துள்ளது.  அது “Berpuluh ribu syaitan sedang berarak menaiki tangga Batu Cave (பல்லாயிரக்கணக்கான  சைத்தான்கள்  பத்து  மலை  படியேறுகின்றன) என்று குறிப்பிட்டிருந்தது.