மசீச முன்னாள் தலைவர்களில் ஒருவரான டாக்டர் லிங் லியோங் சிக், மசீச-வின் புதிய தலைவர் லியோ தியோங் லாயும் அவருக்குமுன் அப்பதவியில் இருந்த டாக்டர் சுவா சொய் லெக்கும் தொடர்ந்து சர்ச்சையிடுவதை நிறுத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டிருக்கிறார்.
“தேர்தலில் ஈடுபடும்போது தேர்தல் முடிவுகளை ஏற்றுக்கொள்ளவும் தயாராக இருக்க வேண்டும்.
“இல்லையேல், தாய்லாந்தில் நடப்பதுபோல் வாழ்நாள் முழுவதும் அதற்கு முடிவே இருக்காது”.
இன்று, காஜாங்கில் செய்தியாளர் கூட்டமொன்றில் லிங் இவ்வாறு கூறினார்.