பழைய குற்றச்சாட்டின் காரணமாக அன்வார் ஜப்பானுக்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டது

anwar 1பிகேஆர்  நடப்பில்  தலைவர்  அன்வார் இப்ராகிம்,   1999-இல்  ஊழல் புரிந்ததாகக்  குற்றம்சாட்டப்பட்டுச்  சிறை  வைக்கப்பட்டிருந்தார்  என்பதுதான்  அவர்  ஜப்பானுக்குள்  நுழைய  அனுமதி  மறுக்கப்பட்டதற்கான  காரணமாகும்.

ஜப்பானில்  அல்லது  வேறு  எந்த  நாட்டிலும்  ஓராண்டு  அல்லது  அதற்கும்  கூடுதல்  காலத்துக்கு  சிறை வைக்கப்பட்ட  ஒருவருக்கு  ஜப்பானுக்குள்  நுழைய  அனுமதி   மறுக்கப்படுகிறது  என  ஜப்பானிய  தூதரகப்  பேச்சாளர்  தொமொகோ  நாகாய்  கூறியதாக  த  ஸ்டார்  நாளேடு  அறிவித்துள்ளது.

அன்வார்,  1999-இல்  அவர்மீதான  குதப்புணர்ச்சி வழக்கு  தொடர்பில்  போலீஸ்   விசாரணைகளில்  குறுக்கிட்டார் எனக்  குற்றம்  சாட்டப்பட்டுச் சிறையிடப்பட்டார்.

பிறகு  2011-இலும்  2012-இலும்  அவர்  ஜப்பானுக்குள்  நுழைய  அனுமதிக்கப்பட்டார்.  அது  எப்படி?. “அப்போது  அவர்  அதற்குச் சிறப்பு  அனுமதியைப்  பெற்றிருந்தார்”,  என  அப்பேச்சாளர்  கூறினார்.

“ஆனால், இப்போது   சிறப்பு  அனுமதி  வழங்குமாறு    கேட்டுக்கொள்ளவில்லை.  அதனால்தான்  அவர்  நாட்டுக்குள்  நுழைய அனுமதிக்கப்படவில்லை”,  என்றாரவர்.