தேர்தல் ஆணையத்தின்(இசி) நடவடிக்கைகளுடன் ஒத்துப்போவதில்லை என்பதற்காக தான் “அரசியல் பேசுவதாக” பிரதமர்துறை அமைச்சர் நன்சி சுக்ரி கூறி இருப்பது சரியல்ல எனத் தேர்தல் சீரமைப்புக்குப் போராடும் அமைப்பான பெர்சே 2.0 மறுப்புத் தெரிவித்துள்ளது.
“கருத்துவேறுபாடு கொள்வது ஜனநாயகத்தின் அடிப்படைக் கோட்பாடுகளில் ஒன்று என்பதை அமைச்சர் மறந்து விட்டார் போலும்”, என பெர்சே 2.0 செயலகம் விடுத்த அறிக்கை ஒன்று கூறியது.
தேர்தல் தொகுதிகள் திருத்தி அமைக்கப்படும்போது நியாயமற்ற நடைமுறைகள் பின்பற்றப்படுவதையும் அது ஒரு அரசியல் கட்சிக்கு மட்டுமே சாதகமாக அமைந்து விடுவதையும் சுட்டிக்காட்டுவதும்தான் தனது நோக்கமாகும் என்றும் மற்றபடி அதை அரசியலாக்கவில்லை என்றும் பெர்சே கூறியது.
பொதுமக்களின் நம்பிக்கையைப் பெறத்தவறிய ஆணையம் தேர்தல் தொகுதிகளைத் திருத்தி அமைக்கும் நடவடிக்கையை மேற்கொள்வது ஜனநாயகத்தை “அவமதிப்பதாகும்”.
“எனவேதான், இப்போது இசி-இல் உள்ளவர்கள் அதைச் செய்யக்கூடாது என்கிறோம்”, என அவ்வறிக்கை மேலும் கூறியது.
தற்போதைய பி என் அரசியல் தமிழ் படங்களில் வரும் தரங்கெட்ட ஊழல் அரசியலுக்கு சமமாகும்.
இல்லை ஜேம்ஸ்.. இவர்கள் அவர்களையும் மிஞ்சிவிட்டனர்..