டாக்டர் லின்: PKFZ மீது ஏஜி வழக்குத் தொடுத்தது ‘மடத்தனமான செயல்’

1 dr lingகிள்ளான் துறைமுகத்  தீர்வையற்ற  மண்டலத்  திட்டம் தொடர்பில் சட்டத்துறை தலைவர்  அப்துல்  கனி  பட்டேய்ல்  சட்ட  நடவடிக்கை மேற்கொண்டது  “மடத்தனமான  செயல்”  என முன்னாள் போக்குவரத்து  அமைச்சர்  டாக்டர்  லிங்  லியோங்  சிக்   சாடினார்.

அத்தீர்வையற்ற  மண்டலம்  அமைப்பதற்கு  நிலம்  கொள்முதல்  செய்ததில்  அரசாங்கத்தை ஏமாற்றியதாக அவர்மீதும்  இன்னொரு  முன்னாள்  போக்குவரத்து  அமைச்சரான  சான்  கொங் சாய்மீதும்  கனி  வழக்கு  தொடுத்ததைத்தான்  லிங் அவ்வாறு  குறிப்பிட்டார்.

நிலத்தை  வாங்குவதென  அமைச்சரவை  எடுத்த  முடிவு  சரியானதே  என்றாரவர்.

“PKFZ-க்காக  நிலம் வாங்கியபோது   ஒரு  சதுர  அடியின்  விலை  ரிம 21. இன்று  ஒரு  சதுர  அடியின்  மதிப்பு  ரிம70-இலிருந்து  ரிம 80-ஆக  உயர்ந்திருக்கிறது. இதுவே  ஆதாயம்தானே”,  என்றவர்  கூறினார்.